சென்னையில் பூமிக்கடியில் மின் கம்பிகள்; நிதி வழங்கி மத்திய அரசு ஒப்புதல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சென்னையில் பூமிக்கடியில் மின் கம்பிகள்;
நிதி வழங்கி மத்திய அரசு ஒப்புதல்

சென்னையில், மின் கம்பிகளை பூமிக்கடியில் அமைக்கும் பணிகளுக்காக, 3,200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,Chennai, பூமிக்கடியில் மின் கம்பிகள்,Underground Electric wires, மத்திய அரசு, Central Government, மின் துறை அமைச்சர்கள் மாநாடு,Power Ministers Conference,  தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி , tamilnadu electricity minister thangamani, கூடங்குளம் அணுமின் நிலையம்,Kudankulam Nuclear Power Plant,  செய்யூர் அனல் மின் திட்டம், Cheyur Thermal Power Project,நிலக்கரி,Coal, நிதி,Finance,


அனைத்து மாநிலங்களின் மின் துறை அமைச்சர்கள் மாநாடு, நேற்று டில்லியில் நடந்தது. இதில், தமிழக மின்துறை அமைச்சர், தங்கமணி பேசியதாவது:

தமிழகத்தின் உபரி மின்சாரத்தை, பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய வசதியாக, தனிப்பயன் பசுமை மின்வழித்தடம் ஏற்படுத்தி தர வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகுகள், 3, 4 ஆகியவற்றின் மொத்த மின் உற்பத்தியான, 2,000 மெகாவாட் மின்சாரத்தையும், தமிழகத்துக்கே வழங்க வேண்டும். செய்யூர் அனல் மின் திட்டத்தை, விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும்.
இத்திட்டத்தின் தேவைக்காக, பிரத்யேகமாக ஒரு நிலக்கரி தொகுதியை, தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின், அமைச்சர் தங்கமணி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. இருப்பினும், சென்னை நகரில், அடிக்கடி மின் தாக்கத்தின் காரணமாக, மின் கம்பங்கள் பழுதடைந்து வருகின்றன. இதை சரிசெய்யும் வகையில், இக்கம்பங்களில் செல்லும் கம்பிகளை, மின் புதை வடங்களாக, அதாவது, பூமிக்கடியில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Advertisement

இந்த திட்டத்துக்காக, மத்திய அரசிடம் கோரப்பட்டிருந்த, 3,200 கோடி ரூபாய்க்கு, தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. நவ., 29ல் வீசிய, 'ஒக்கி' புயல் காரணமாக, கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன; 11 ஆயிரம் மின் கம்பங்கள் வீழ்ந்துவிட்டன. நான்கு நாட்கள் அங்கேயே முகாமிட்டு பணியாற்றினோம். அதிகாரிகள் இன்னும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில், முழுவதுமாக மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) கண்ணுக்கு தெரியும்படி இருக்கும் போதே இவ்வளவு உயிரிழப்புகள்...கண்ணுக்கு தெரியாமல் பூமிக்கடியில் ஏதாவது மின் கசிவு ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும்...நம் நாட்டை போன்ற கட்டமைப்பு கொண்ட நாடுகளுக்கு நிச்சயம் பூமிக்கடியில் புதைக்க படும் மின்சாரம் என்பது ஆபத்துதான்...

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
08-டிச-201722:04:06 IST Report Abuse

r.sundaramஓரிரு நாட்களில் சரியாகும் என்பதை திரும்ப திரும்ப சொல்கிறீர்கள். எப்போதுதான் சரியாகுமோ தெரியவில்லை.

Rate this:
alagesh - tamilnadu  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-201721:28:16 IST Report Abuse

alageshநீங்கள் 3 கோடி ரூபாய் தான்டா செலவு செய்து கணக்கு 3200 கோடி

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X