தேசிய பேரிடராக அறிவியுங்கள்! : பிரதமருக்கு முதல்வர் கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேசிய பேரிடராக அறிவியுங்கள்! : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேசிய பேரிடர்,National Disaster, ஒக்கி புயல் ,okki storm, மீட்பு மற்றும் நிவாரணப் பணி,Rescue and Relief Work, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palani, பிரதமர் மோடி ,Prime Minister Modi,  கன்னியாகுமரி, Kanyakumari,மீனவர்கள், Fishermen,பாதுகாப்புத் துறை,Defense Department,  மத்திய அரசு, Central Government, படகுகள் , Boats,

சென்னை: 'ஒக்கி புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு, நிதியுதவி அளிக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: 'ஒக்கி' புயலால், கன்னியாகுமரி மாவட்டம், பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இங்குள்ள மீனவர்கள், அதிக அளவில், ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு, 'ஒக்கி' புயல் குறித்த அறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை. நாட்டு படகு மீனவர்களும், நவ., 29ல், மீன் பிடிக்க சென்ற பிறகே, புயல் எச்சரிக்கை அறிவிப்பு வெளியானது. இதனால், புயலில் மீனவர்கள் சிக்கி, பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அனைத்து மீனவர்களையும் கண்டுபிடிக்கும் வரை, தேடும் பணியை தொடர வேண்டும். அரபிக் கடல் பகுதியிலும், குஜராத் மற்றும் மாலத்தீவு வரையிலும், மீனவர்களை தேடும்படி, பாதுகாப்புத் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.
புயலால், கன்னியாகுமரி மாவட்டத்தில், மின் கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன. வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலை, குடிநீர் வசதி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, 'ஒக்கி' புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். சேத மதிப்பு கணக்கிடும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், விரிவான விபரம், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு, உரிய நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

புயலுக்கு பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் : 'கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, அனைத்து மீனவர் குடும்பங்களுக்கும், வாழ்வாதார உதவியாக, தலா, 2,500 ரூபாய் வழங்கப்படும். புயலில் மரணமடைந்த, மீனவர் குடும்பத்தினருக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 'ஒக்கி' புயலில் சிக்கி, பிற மாநிலங்களில் கரை சேர்ந்த, தமிழக மீனவர்களுக்கு, அரசு செலவில், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்க, நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், படகுகளுடன் ஊர் திரும்பும் ஏற்பாடுகள் செய்ய, ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, லட்சத்தீவு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
'ஒக்கி' புயலில் சிக்கி, மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு, காப்பீட்டு உதவி, இரண்டு லட்சம் ரூபாய் உட்பட, தலா, 10 லட்சம் ரூபாய்; புயலில் சிக்கி ஊனமடைந்து, தொழில் செய்ய முடியாத மீனவர்களுக்கு, மறுவாழ்வு நிதியாக, ஐந்து லட்சம் ரூபாய்; சிகிச்சையில் உள்ள மீனவர்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
புயலால், டிசம்பர் மாதம், மீன்பிடித் தொழில் செய்ய இயலாத நிலையை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தின், அனைத்து மீனவர் குடும்பங்களுக்கும், வாழ்வாதார நிதியாக, தலா, 2,500 ரூபாய் வழங்கப்படும். காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கப்படும். பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களுக்கு, எரிபொருள் மற்றும் உணவுப்படியை உயர்த்தி வழங்க, மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, குஜராத், மஹாராஷ்டிரா, லட்சத்தீவில் ஒதுங்கியுள்ள மீனவர்களுக்கு, விசைப்படகிற்கு, ஆயிரம் லிட்டர் எரிபொருள், உணவுப்படியாக நபருக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும்.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒதுங்கியவருக்கு, 750 லிட்டர் எரிபொருள், உணவுப்படியாக, 2,000 ரூபாய் வழங்கப்படும். நாட்டுப் படகு ஒன்றுக்கு, 200 லிட்டர் எரிபொருள், 2,000 ரூபாய் உணவுப்படி வழங்கப்படும். தமிழகத்தில் பதிவு செய்து, புயலில் பாதிப்புக்குள்ளான மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்களை புதுப்பிக்க, தகுந்த மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கப்படும். இதற்காக, வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
H.FREDERICK MOORTHY - Chennai,இந்தியா
09-டிச-201700:12:18 IST Report Abuse
H.FREDERICK MOORTHY புயல் அடித்து 8 நாட்கள் ஆகி எல்லாம் பாழாகி மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேலாக காணாமல் போயும் எந்த கவலையும் இல்லாமல் உங்களது விளம்பரத்துக்காக அரசாங்க பணத்தை செலவிட்டு MGR நூற்றாண்டு விழா என்ற பெயரில் பல கோடி செலவழித்து வீணாக்கி அதிலும் அரசாங்க விழாவில் எதிர் கட்சிகளை தாக்கி பேசி பணமும் கொள்ளை அடித்து விட்டு இப்பொழுது சாவகாசமாக பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாராம். கன்யாகுமரிக்கு செல்வதற்க்கு இவருக்கு நேரம் இல்லை. ஆனால்சென்னையில் ac அறையில் அமர்ந்து கொண்டு அமைச்சர்களோடும் அதிகாரிகளோடும் நிவாரணம் செய்ய மிக மிக சாவதானமாக ஆலோசனை செய்கிறாராம். எத்தனை மீனவர்கள் மாண்டு போனார்கள் என்பது கூட தெரியாமல் எவ்வளவு சேதம் ஆயிற்று என்றும் அறியாமல் மத்திய அரசாங்கத்தில் பேரிடர் என்று அறிவிக்க கூறி அதற்கு நிதி கேட்டால்அதில் எவ்வளவு கொள்ளை அடக்கலாம் என்று ஆலோசனை நடத்தும் கூட்டம்.இதிலே எப்பொழுதும் போல ஒரு ஜால்ரா அமைச்சர் ஜெயக்குமார் வேறு செய்தியாளர்களுக்கு நிவாரணம் அளிப்பது பற்றி இப்பொழுதான் கூறுகிறார். இந்த அமைச்சர் என்னவோ பெரிய அறிவாளி போல எப்பொழுதும் செய்தியாளர்களை சந்தித்து மக்களை முட்டாளாக்கும்படி பலவற்றை உண்மை போல கூறி ஏமாற்றுகின்றார். மஹாராஷ்டிராவில் ரத்னகிரியில் பலநாட்களாக அவதிப்படுகின்ற 500 மீனவர்களை தமிழகம் அழைத்து வர இப்பொழுதான் உங்களது அதிகாரி சென்று உள்ளார். ஏன் இத்தனை வெகு விரைவாக நடவடிக்கை எடுத்து விட்டீர்கள்? இன்னும் ஆர் கே நகர் தேர்தலில் பிரச்சாரம் செய்து விட்டு வாக்காளர்களுக்கு பணமும் கொடுத்து வாக்கு வாங்குவதற்கு முயற்சித்து பிறகு இன்னும் சாவகாசமாக இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாமே. பாவம் மீனவர்கள் ஏழைகள்தானே. அவர்கள் வாழ்ந்தாலும் மடிந்தாலும் உங்களுக்கு என்ன கவலை? உங்களது கொள்கை ஆட்சி நீடிக்கும் வரை எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதுதானே. ஏன் என்றால் உங்கள் கட்சியில் ஒருவர் கூட வெற்றி பெற போவது இல்லை. எப்படி சசிகலாவுக்கு இந்த கதி ஏற்பட்டதோ அதேபோல நீங்களும் உங்கள் அமைச்சர்களும் MLA களும் சிறைக்கு போவது உறுதி. ஆர் கே நகர் மக்கள் நிச்சயம் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் தோல்வி கொடுத்து நல்ல பாடம் புகட்டுவார்கள். இதைவிட உங்களுக்கு ஒரு கேவலம் நீங்கள் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை கேரளா மாநிலம் தமிழக மீனவர்களையும் எடுத்திருக்கிறார்கள். அந்த அரசாங்கம் மீனவர்களுக்கு மோட்டார் படகுக்காக டீசல் கொடுத்து உதவுகிறர்கள். பினராயி விஜயன் அவர்கள் கேரளா மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு எவ்வளவு பெருமை அளித்திருக்கிறார். உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் இருந்தால் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். மீனவ நண்பனாக நடித்து கட்சி ஆரம்பித்து அந்த கட்சி இன்று ஆட்சியில் மீனவர்களை பற்றி கவலை படாமல் இருப்பது உங்களது தலைவருக்கு அவமானம். தயவு செய்து இனியும் உங்களது தலைவரின் நூற்றாண்டை நீங்கள் கொண்டாடுவது உங்களுக்கும் அழகில்லை இந்த நாட்டிற்கும் அழகில்லை. MGR பாடல்களில் நடித்தது உங்களை போன்ற நபர்கள் அவர் கட்சியில் வந்து ஊழல் மன்னர்களாகவும் ஊழல் ராணிகளாகவும் இருப்பார்கள் என்று நினைத்துதான் நடந்ததோ? தயவு செய்து அவரது ஆத்மாவை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை. இப்பொழுது உங்கள் அனைவரையும் கட்சியையும் பார்த்தால் அவரது ஆத்மா நிச்சயம் சாந்தி அடையாது. " போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே. பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே" "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்." இவை அவர் பாடி நடித்த பாடல்கள். இவை ஒரு சிறு உதாரணம் தான். இன்னும் பல உள்ளன.
Rate this:
Share this comment
Cancel
Jeeva - virudhunagar,இந்தியா
08-டிச-201718:02:56 IST Report Abuse
Jeeva ஒக்கி புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
08-டிச-201717:23:10 IST Report Abuse
Prem Tamilnattu makkaloda nalanukaga arasu ella valigalilum nadavadikai eduthu varugirathu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X