தேர்தல் அதிகாரியிடம் விஷால் மீண்டும் மீண்டும் முறையீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அதிகாரியிடம் விஷால் மீண்டும் மீண்டும் முறையீடு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நடிகர் விஷால் வேட்பு மனுவில், தங்களுடைய கையெழுத்து போலியாக போடப்பட்டு உள்ளதாக, புகார் கூறியவர்களில், இருவர், நேற்று மீண்டும் ஆஜராகி, அதை உறுதி செய்ததை தொடர்ந்து, விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனு தள்ளுபடி குறித்து, நடிகர் விஷால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானியை சந்தித்து, புகார் அளித்தார். 'எதுவாக இருந்தாலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிடுங்கள்; அவர் தான் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்' என, லக்கானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை, 3:00 மணிக்கு, விஷால், தேர்தல் அலுவலகம் வந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர், வேலுசாமியை சந்தித்து முறையிட்டார்.

பின், அவர் கூறியதாவது: மாலை, 3:00 மணிக்குள் விளக்கம் அளித்தால், என்னுடைய மனு ஏற்கப்படும் என, தகவல் வெளியானது. ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர், அது போன்று, எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என, கூறிவிட்டார். இந்த தேர்தலில், நான் போட்டியிடுவது முக்கியமில்லை. எனக்காக, கையெழுத்து போட்ட சுமதி, தீபன் பாதுகாப்பு தான் முக்கியம். அவர்கள் வீட்டு முன், யார் யாரோ நிற்கின்றனர். எனக்கே இந்த நிலை என்றால், மக்களின் நிலையை நினைத்தால், கவலையாக உள்ளது. நான் இந்த பிரச்னையை விட்டுவிடப் போவது இல்லை. தேர்தல் கமிஷனிடம் முறையிடுவேன்; நீதிமன்றம் செல்வேன்; காவல் நிலையத்திலும் புகார் அளிப்பேன். மக்களை சந்தித்து முறையிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

ரசிகர்கள் கையெழுத்து :தேர்தல் அலுவலகத்திற்கு, விஷால் வந்ததை அடுத்து, ஆர்.கே.நகரில் உள்ள அவரது ரசிகர்கள், 50க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். 'இரண்டு கையெழுத்தை தானே நிராகரித்தீர். இதோ, 1,000 கையெழுத்து உள்ளது; எடுத்துக் கொள்ளுங்கள்' என, கூச்சலிட்டனர். போலீசார், அவர்களைஅப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை