ஆர்.கே.நகரில் பழனி-பன்னீர் கூட்டு பிரசாரம்; ஸ்டாலின் மீது முதல்வர் கடும் தாக்கு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்.கே.நகரில் பழனி-பன்னீர் கூட்டு பிரசாரம்;
ஸ்டாலின் மீது முதல்வர் கடும் தாக்கு

சென்னை : ''ஆர்.கே.நகர் மக்களுக்கு, தி.மு.க., எதுவும் செய்யவில்லை. மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வராக, ஸ்டாலின் இருந்த போதும், தொகுதியை எட்டிப் பார்க்கவில்லை,'' என, முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

பழனிசாமி,palanisami, பன்னீர்செல்வம், Panneerselvam,ஸ்டாலின்,Stalin ,ஆர்.கே.நகர் தேர்தல், RK Nagar election, மதுசூதனன்,Madhusudhanan, துணை முதல்வர் பன்னீர்செல்வம்,Deputy Chief Minister Panneerselvam,  ஜெயகுமார்,Jayakumar, விஜயபாஸ்கர்,Vijayabaskar,  கோகுல இந்திரா , Gokula Indira, ஜெயலலிதா, Jayalalithaa,அ.தி.மு.க,AIADMK, தி.மு.க,DMK,முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy,


சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர், மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஜெயகுமார், விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர், கோகுல இந்திரா மற்றும் கட்சி நிர்வாகிகள், கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகரில், திறந்த வேனில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரசாரத்திற்கு முன், கொருக்குப்பேட்டை, நாராயணபுரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களை, மேளதாளங்கள் முழங்க, கட்சியினர் வரவேற்றனர். வீடுகளின் மாடியில் இருந்து பெண்கள், குழந்தைகள், பூக்களை துாவினர். வழிநெடுகிலும், பெண்கள் ஆரத்தி எடுத்தனர். முதல்வர், துணை முதல்வருக்கு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பெண்கள், ஆண்கள், வழிநெடுகிலும் குத்தாட்டம் போட்டனர்.

பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ஆர்.கே.நகர் தேர்தல், அ.தி.மு.க., வலிமையை நிரூபிக்கும் தேர்தலாக உள்ளது. இத்தொகுதி, ஜெயலலிதாவின் தொகுதி என்பதால், இந்தியா முழுவதும், 'அம்மா தொகுதி' என்ற முத்திரை பெற்றுள்ளது. அவர், ஏராளமான திட்டங்களை வழங்கி இருக்கிறார். இதற்கு முன், ஆர்.கே.நகரில் பல, எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், போதிய திட்டங்கள் வழங்கப்படவில்லை.
ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பட, ஏராளமான திட்டங்களை, ஜெ., வாரி வழங்கி இருக்கிறார்.

இன்றைய எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின், 'இந்த தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றால், ஆர்.கே.நகர் வளர்ச்சி பெறும்' என்கிறார். அவர், ஐந்து ஆண்டுகளாக, சென்னையில் மேயராக இருந்த போது, ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும், மாநகராட்சி கட்டுப்பட்டிற்குள் தான் வருகிறது.

எந்த திட்டமும், ஆர்.கே.நகர் மக்களுக்கு செய்யவில்லை. அதன்பின், உள்ளாட்சி அமைச்சராக, துணை முதல்வராக, ஸ்டாலின் இருந்தார். அப்போது, தொகுதியை எட்டிக் கூட பார்க்கவில்லை. தொகுதிக்கு, எந்தவித அடிப்படை தேவையையும் நிறைவேற்றவில்லை. ஜெ., தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தான், முதல்வரான பின் தான், தொகுதிக்கு விடிவு காலம் ஏற்பட்டது; கல்லுாரி கட்டி கொடுத்தார்; பல்வேறு நலத் திட்டங்களை செய்தார்.

தொகுதிக்கு, ஏராளமான திட்டம் வருவதற்கு, மதுசூதனன் அடித்தளமிட்டு உள்ளார். ஜெயலலிதா, மதுசூதனனை அழைத்து தான், 'ஆர்.கே.நகர் தொகுதிக்கு, என்ன செய்ய வேண்டும்' என, கேட்டறிந்து நிறைவேற்றினார். அவர் விட்டு சென்ற பணிகளை, மதுசூதனன் தொடருவார்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

இலவச வீடு:


துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: மதுசூதனன், உங்களில் ஒருவர். ஏற்கனவே ஜெ., பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். 'ஆர்.கே.நகரில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு வீடு கட்டி தரப்படும்' என அவர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே இப்பகுதியில் உள்ள அடித்தட்டு மக்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்த உடன், ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசார துளிகள்:


* பிரசாரத்தின்போது, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் திறந்த வேனில் பேசினர். வேனுக்கு பின்னால் வந்த, இரு சக்கர வாகனங்கள் ஒலி எழுப்பியபடி சென்றதால் பேச சிரமப்பட்டனர்

Advertisement


* கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகர், 1 முதல் 5 தெருக்களில் முதல்வர் பிரசாரம் செய்வதாக இருந்தது. இரண்டு தெருக்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்த முதல்வர், அம்பேத்கர் மூன்றாவது தெருவில் பிரசாரத்தை முடிக்க முயன்றார். அவரை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், 'இப்பகுதி மக்களிடம் நமக்கு அமோக வரவேற்புள்ளது' என வற்புறுத்தி அழைத்து சென்றனர். ஆனால், அம்பேத்கர், 4வது, 5வது தெருக்களுக்கு செல்வதை தவிர்த்து, பாதி வழியிலேயே பிரசாரத்தை முடித்து, முதல்வர் கிளம்பினார்
* காசிமேட்டில், சூரியநாராயண தெருவில், அ.தி.மு.க., தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. அதை, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். பிரசார துண்டு பிரசுரத்தை முதல்வர் வெளியிட, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பெற்றார்.

விஷால் அபாண்டம்:

''அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக, தேர்தல் கமிஷன் செயல்படவில்லை,'' என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: எங்களின் பிரதான எதிர்க்கட்சி தி.மு.க., தான். அவர்களுக்கு எதிராக தான், பிரசாரம் மேற்கொள்கிறோம். அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படவில்லை. தேர்தல் கமிஷன், தனி அமைப்பு. ஆனால், தேர்தல் கமிஷனின் மீது விஷால் அபாண்டமாக குற்றஞ்சாட்டுகிறார். நாங்கள் தினகரனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆர்.கே.நகரில் சென்ற இடத்தில் எல்லாம் அ.தி.மு.க.,விற்கு அமோக வரவேற்பு உள்ளது; வெற்றியும் பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
a.s.jayachandran - chidambaram,இந்தியா
08-டிச-201721:27:04 IST Report Abuse

a.s.jayachandranதொடர்ந்து ஏழாண்டு காலம் நீங்கள்தான் ஆட்சி செய்து இருக்கீங்க மறுபடியும் ஏன் ஸ்டாலின் அவர்களை குறை சொல்கிறீர்கள்.நீங்களாவது நல்லது செய்து இருக்கலாமே.நல்லதை யார்வேண்டுமானாலும் செய்யலாம் .

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
08-டிச-201718:03:50 IST Report Abuse

Jeeva Stalin oru aale kidaiyathu

Rate this:
Prem - chennai,இந்தியா
08-டிச-201717:24:00 IST Report Abuse

PremMakkalin aatharavu endrum irattai ilai chinnathuku than

Rate this:
RENETO - Chennai,இந்தியா
08-டிச-201716:59:53 IST Report Abuse

RENETORK nagar la easy a ADMK win pannum.. entha theeya sakthikkum anga idam illai...

Rate this:
Sarathi_Ganesh - Delhi,இந்தியா
08-டிச-201716:55:55 IST Report Abuse

Sarathi_Ganeshvetri chinnam irattai ilaikku than vetri.....

Rate this:
Marimuthu - chennai,இந்தியா
08-டிச-201716:24:12 IST Report Abuse

Marimuthu பிராடு

Rate this:
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
08-டிச-201715:38:02 IST Report Abuse

Selvam Pillaiஒரு அமைச்சருக்கும் பேச தெரிய வில்லை , ஊழல் ராணி ஜெயா தொகுதி ஆர் கே நகர் . இதில் ஸ்டாலின் எங்கிருந்து வந்தார் என்று புரியவில்லை அப்பன் குதிருக்குள்ளே இல்லை என்று கூறுகிறார்கள் வெட்கமாயில்லை.

Rate this:
H.FREDERICK MOORTHY - Chennai,இந்தியா
08-டிச-201713:59:32 IST Report Abuse

H.FREDERICK MOORTHY எடப்பாடி அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை என்பது நன்கு தெரிகிறது. MGR நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசு பணத்தை செலவழித்து எதிர் கட்சிகளை குறை கூறுவது ஒன்றுதான் செய்து கொண்டுதான் இருந்தார்கள். ஒக்கி புயலால் குமரி கண்டம் முழுவதும் பாழாகி விட்டது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடலில் தவிக்கும்பொழுது இவர் MGR நூற்றாண்டு விழாவில் எதிர்கட்சிகளை பழிப்பதை முக்கியமாக செய்தார். கன்யாகுமரிக்கு செல்லாமலும் மீனவர் குடும்பத்தை ஆறுதல் செய்யாமலும் ஆர் கே நகரில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றே செய்து கொண்டு இருந்தார். டெல்லிக்கு இவரும்,பதவி வெறி கொண்ட பன்னீர்செல்வமும் கட்சிக்காகவும் பதவிக்காகவும் அரசு பணத்தில் எத்தனை முறை சென்றார்கள். அருகில் இருக்கும் கேரளா மாநிலத்தை பார்த்தும் அந்த முதல்வரை பார்த்தும் இந்த பதவி வெறி கொண்டவர்களுக்கு வெட்கம் வர வில்லை. சென்னையில் உட்கார்ந்து கொண்டு பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் மும்முரமாக இருக்கின்றார். ஆர் கே நகரில் கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்கள் ஆட்சியில் இருந்தும் என்ன செய்து விட்டார்கள்? அதுவும் முதல்வர் தொகுதியாக இருந்தும் ஒரு துரும்பை கூட எடுத்து போடவில்லை. இப்பொழுது இந்த மதுசூதனன் என்ன செய்ய போகிறார்? அவரது பழைய வரலாறு அவரை ஒரு நல்லவராக காட்டவில்லை. குமரி மக்கள் கொதித்து எழுந்து உள்ளனர். இந்த அராஜக ஆட்சியின் பெருமை என்ன என்றால் அந்த மக்கள் தங்களது மாவட்டத்தை கேரளா மாநிலத்தோடு இணைக்க சொல்லி கோஷம் இடுகிறார்கள். இந்த 50 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த நன்மை இது ஒன்று தான். அதுவும் மக்கள் மடையர்களாக இருந்து இன்னும் இந்த மோசமான அண்ணா திமுக கட்சிக்கு ஓட்டு போட்டால் கன்யாகுமரி மட்டும் அல்ல முழு தமிழ்நாட்டை இவர்கள் கொள்ளை அடித்து தமிழ்நாடு என்ற ஒரு மாநிலமே இல்லாமல் செய்து விடுவார்கள். மக்களே இவர்களது துரோக அராஜக ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கும் அடையாளமாக ஆர் கே நகரில் மதுசூதனனையும் அண்ணா திமுக கட்சியையும் பலமாக தோற்கடித்து இனி எதிர்காலத்தில் அந்த கட்சியே இல்லாமலும் இந்த கொள்ளை கூட்டத்தை முழுவதும் இல்லாமல் செய்து தமிழ் நாட்டை காத்திடுங்கள்.

Rate this:
sachin - madurai,இந்தியா
08-டிச-201712:13:25 IST Report Abuse

sachin7 ஆண்டுகாலம் என்னத்த செய்தீர்கள் என்று சொல்ல கூட முடியாமல் எப்படி லாம் ஏமாத்தலாம் என்று ஜெயா முறையே பேசுறானுக பா ......ஆர்.கே நகர் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை இன்று வரை ...ஏழை மக்களுக்கு கட்டிய வீடுகள் திறக்காமல் அதை சமூகவிரோதிகள் பயந்து கொண்டு இருப்பதாக டி.வீ ல மிக அழகாக காண்பித்தார்கள் கண் இருந்தா பாருங்க ஆளும் ஆட்சியாளர்களே .....தண்ணீர் , மற்றும் எந்த வசதியும் இல்லாமல் தவிக்கிறோம் என்று தாய்மார்கள் குமிறியதை கொஞ்சம் பாருங்க ஈ பீ எஸ் ...தர்மயுத்தர் ஓ பி எஸ் அவர்களே ...........இனியும் காசு வாங்கி கொண்டு ஒட்டு போட்டால் துடைக்க கூட பேப்பருக்கு அலைய வேண்டி இருக்கும் ........ஆளும் அரசுக்கு நீங்கள் செய்வது தப்பு என்று உங்கள் ஒட்டு மூலம் காட்டுங்கள் எல்லா மாவட்டமும் இதற்க்கு தயார் ஆனால் வாய்ப்பு ஆர்.கே நகருக்கு கிடைத்து இருக்கிறது ............

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
08-டிச-201709:22:53 IST Report Abuse

balakrishnanஇவங்க பிரச்சாரம் பண்ணுகிற அழகை பார்க்கும்போது, அந்த காலத்தில் அசோகனும் நம்பியாரும் வலம் வருவதை போல இருக்கு,

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement