ரயில் பயணியர் வசதிக்காக, 'ஆப்'கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில் பயணியர் வசதிக்காக, 'ஆப்'கள்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: 'பயணியரின் வசதிக்காக பல்வேறு, 'மொபைல் ஆப்'கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன' என, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பியுஷ் கோயல், அமைச்சக இணையதளத்தில் கூறியுள்ளதாவது: பயணியருக்கு அதிக வசதிகள் செய்வதுடன், புதிய வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாக பயன்படுத்துகிறோம். பயணியருக்கு மிகச் சிறந்த சேவை அளிக்கும் வகையிலும், அவர்களுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையில், பல்வேறு மொபைல் ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர மேலும் பல புதிய ஆப்கள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X