'வழக்கறிஞர்கள் தகுதி நீக்கம்'| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'வழக்கறிஞர்கள் தகுதி நீக்கம்'

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னையில், பார் கவுன்சில் தலைவர், விஜய் நாராயண் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், பதிவு செய்துள்ள, 86 ஆயிரம் வழக்கறிஞர்களில், 56 ஆயிரம் பேர் மட்டுமே, முறையான கல்வி சான்றிதழ்கள் சமர்ப்பித்து உள்ளனர்.
நவ., 30க்குள், பார் கவுன்சில் வாக்காளர் பட்டியல் வெளியிட, உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, பார் கவுன்சில் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளோம். இது குறித்த விசாரணை, 11ம் தேதி நடக்க உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தப்படும். மேலும், சேமநல நிதிக்கு சந்தா செலுத்தாத, 9,249 வழக்கறிஞர்கள், தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
பார் கவுன்சில் தேர்தலில், அவர்கள் ஓட்டளிக்க முடியாது. பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டவர்களில், 400 வழக்கறிஞர்கள் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X