நிலக்கரி கொள்முதல் : 4 நிறுவனம் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி கொள்முதல் : 4 நிறுவனம் பங்கேற்பு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழக மின் வாரியம், 1,200 கோடி ரூபாய்க்கு, நிலக்கரி கொள்முதல் செய்ய கோரிய டெண்டரில், நான்கு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மின் வாரியத்தின், ஐந்து அனல் மின் நிலையங்களில், எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலக்கரி, கோல் இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. வட மாநிலங்களில் பெய்த மழையால், தமிழகத்திற்கு நிலக்கரி சப்ளை பாதித்துள்ளது. இதையடுத்து, இம்மாதம் முதல், 2018 ஏப்., வரை பயன்படுத்த, 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான, 20 லட்சம் டன் நிலக்கரி வாங்க, மின் வாரியம், நவ., 18ல், 'டெண்டர்' கோரியது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: எண்ணுார் துறைமுகம் வழியாக, 14 லட்சம் டன்; துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, 6 லட்சம் டன் நிலக்கரி வாங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரில், நிறுவனங்கள் பங்கேற்க, டிச., 6 கடைசி நாள். அதில், எம்.எம்.டி.சி., - அதானி, நாலேஜ், மஹேஸ்வரி பிரதர்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
அவை வழங்கிய, விலைப்புள்ளி திறக்கப்படவில்லை; மற்ற விபரங்கள் ஆராயப்படுகின்றன. விலைப்புள்ளி திறந்த பின், அதிகமாக குறிப்பிட்டுஇருந்தால், விலை குறைப்பு பேச்சு நடத்தப்படும். இறுதியாக, விலை ஏற்புடையதாக இருந்தால் மட்டும், 'ஆர்டர்' தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X