வீட்டுவசதி சங்க ஊழியர்கள் 98 பேருக்கு மாற்று வேலை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுவசதி சங்க ஊழியர்கள் 98 பேருக்கு மாற்று வேலை

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், உபரியாக உள்ள, 98 பணியாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை ரேஷன் கடைகளில் பணி ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், ஏழை மக்களுக்கு குறைந்த விலையில், வீட்டுவசதியை ஏற்படுத்தி தருவதற்காக, 860 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. நலிவுஅடைந்த நிலையிலுள்ள சங்கங்கள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

775 பணியாளர்கள் : இதன்படி, 303 நலிவுஅடைந்த சங்கங்களில், 775 பணியாளர்கள், உபரிஆக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை, நல்ல நிலையில் இயங்கும் சங்கங்களில் உள்ள காலியிடங்களுக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. இதன்படி, 10 ஆண்டுகள் பணியாற்றியோரில், பிளஸ் 2 படித்தோரை, வேறு துறைக்கு மாற்றுவது குறித்தும், கூட்டுறவுத் துறை ரேஷன் கடைகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்தும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆய்வு செய்தது.

அரசாணை : பின், 90 பேரை, கூட்டுற வுத் துறை ரேஷன் கடைகளில், விற்பனையாளர்களாகவும், எட்டு பேரை, 'பேக்கிங்' செய்யும் பணியாளர்களாகவும் நியமிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்து உள்ளார். இவர்கள் அனைவரும், டிச., 8க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை