தண்ணீர் வரத்து குறைவு : மின் உற்பத்தி பாதிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் வரத்து குறைவு : மின் உற்பத்தி பாதிப்பு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுஉள்ளதால், தடுப்பணைகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் நீர் மின் உற்பத்தி திட்டத்தில், செக்கனுார், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை, பவானி கதவணை கட்டளை திட்டத்தில், சமயசங்கிலி, ஓடப்பள்ளி, பாசூர் - சோழசிராமணி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவு வரும் போது, டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் போது, ஒவ்வொரு கதவணையிலும், 9 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி, தலா, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆற்றில் வரத்து குறையும்போது, மின் உற்பத்தி குறையும். கடந்த ஜூன் முதல், ஆற்றில் வரத்து அதிகரித்து, பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால், தடுப்பணைகளில் மின் உற்பத்தி அதிகரித்தது. இந்நிலையில், கடந்த வாரம் முதல், ஆற்றில், தண்ணீர் வரத்து குறைந்து, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 500 கன அடி தண்ணீர் வருவதால், மாலை, 6:00 மணி முதல், மின் உற்பத்தி நடக்கிறது. 6 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை