'டிரிப் ஷீட்' எழுதாவிட்டால் லைசென்ஸ் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'டிரிப் ஷீட்' எழுதாவிட்டால் லைசென்ஸ் ரத்து

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: வாடகை வாகனங்களில், 'டிரிப் ஷீட்' எனப்படும், பயண விபர குறிப்பேடு எழுதாத டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்யுமாறு, தமிழக போக்குவரத்து கமிஷனர், தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து மண்டல அலுவலர்கள், ஆர்.டி.ஓ.,க்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து அமலாக்கப் பிரிவு இணை கமிஷனர்களுக்கு, தயானந்த் கட்டாரியா பிறப்பித்துள்ள உத்தரவு: மாநிலங்களில் நடைபெறும் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறித்து, ஒவ்வொரு காலாண்டிலும், உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்கிறது. விபத்திற்கான காரணம், தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்புகிறது.
மேலும், 2020க்குள், விபத்துகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க அறிவுறுத்தி உள்ளது. இதுவரை, தமிழகத்தில் நடந்துள்ள விபத்துகளில், 90 சதவீத விபத்துகள், டிரைவர்களின் கவனக்குறைவால் நடந்துள்ளன. ஒரு நாளில், எட்டு மணி நேரத்துக்கும் மேல், வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உடல் மற்றும் மூளை சோர்வே, விபத்துகளுக்கு முக்கிய காரணம் என, கண்டறியப்பட்டு உள்ளது. அதனால், டிரைவர்களின் பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டியது கட்டாயமாகி உள்ளது. மோட்டார் வாகன சட்டம், 1988, 91 - 1ன் படியும், 1961 மோட்டார் வாகன தொழிலாளர் சட்டத்தை, டூரிஸ்ட் டாக்சி டிரைவர்கள், மேக்சி கேப் டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டும். அதன்படி, ஒரு டிரைவர், டூரிஸ்ட் வாகனங்களை, ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரத்துக்கு மேல் இயக்கக் கூடாது. தொடர்ந்து, ஐந்து மணி நேரம், வாகனத்தை இயக்கினால், அரை மணி நேரம் ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும். அதேபோல், வாரம் ஒரு நாள் ஓய்வெடுக்க வேண்டும். டிரைவர் ஒரு, 'ஷிப்டு' பணியை முடித்த பின், தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. டிரைவர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; விபத்து காப்பீடு செய்திருக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம், 260ன் படி, 'டிரிப் ஷீட்' எனப்படும், பயண விபர குறிப்பேட்டை எழுத வேண்டும்.

மூன்றாண்டுகளுக்கான, டிரிப் ஷீட் விபரத்தை, ஆர்.டி.ஓ.,விடம், வாகன உரிமையாளர் வழங்க வேண்டும். இவ்வாறு செய்யாத டிரைவர், வாகன உரிமையாளர்கள், சட்டத்தை மீறியதாக கொள்ளப்படும். போக்குவரத்து துறை அமலாக்கப்பிரிவு இணை கமிஷனர்கள், ஆர்.டி.ஓ.,க் கள், வாகன சோதனையின் போதும், விபத்தின் போதும், டிரிப் ஷீட்டை ஆய்வு செய்ய வேண்டும்.
அதில், ஓய்வின்றி வாகனம் ஓட்டியது தெரிந்தாலோ, டிரிப் ஷீட்டை முறையாக எழுதாமல் இருந்தாலோ, டிரைவர் மற்றும், வாகன உரிமையாளரின் உரிமங்களை ரத்து செய்யலாம்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
08-டிச-201710:48:12 IST Report Abuse
Harinathan Krishnanandam இது என்ன சோதனை சட்டப்படியும் ஒழுங்காகவும் நடந்துகொள்ள இவ்வளவு நெருக்கடியா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை