மேல் அடுக்கு சுழற்சியால் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேல் அடுக்கு சுழற்சியால் மழை

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேல் அடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து உள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒக்கி புயலின் மாற்றத்தால், வலுப்பெறவில்லை. இது, தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், மழையை தரும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், காற்றின் திசை மாற்றத்தால், தாழ்வு மண்டலம், ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி திரும்பி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மேல் அடுக்கு சுழற்சியால், சில இடங்களில், மிதமான மழை பெய்தது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விருதுநகரில், 11 செ.மீ., மழை கொட்டியது. அடுத்து வரும் சில தினங்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், லேசான மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை