கார் விபத்து: உயிர் தப்பிய இயக்குனர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் விபத்து: உயிர் தப்பிய இயக்குனர்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: லாரி மீது சொகுசு கார் மோதியதில், திரைப்பட இயக்குனர் கவுதம் மேனன், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர், கவுதம் மேனன், 50. இவர், நேற்று அதிகாலை, சொகுசு காரில், மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்றார். அவருடன், நண்பர்கள் இரண்டு பேர், காரில் இருந்தனர். அதிகாலை, 4:30 மணிக்கு, சோழிங்கநல்லுார், ஆவின் சிக்னலில், வலது பக்கமாக, ஒரு லாரி திருப்பி உள்ளது. அப்போது, அதிவேகமாக சென்ற சொகுசு கார், லாரி பின்பகுதியில் மோதியது. இதில், கவுதம் மேனன் மற்றும் நண்பர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காரின் முன்பகுதி, பலத்த சேதம் அடைந்தது. கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், கவுதன் மேனன் மற்றும் லாரி ஓட்டுனரான படப்பையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 35, ஆகியோரிடம் விசாரித்தனர்.கவுதம் மேனன் துாக்க கலக்கத்தில் இருந்ததாக, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 'இரண்டு தரப்பும் சமரசம் பேசி முடித்ததால், வழக்கு பதிவு செய்யவில்லை' என, போலீசார் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
08-டிச-201710:31:22 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam கவுதம் மேனன் காயம் பட்டதற்காக அவரது ரசிகர்கள் தீக்குளித்துவிட போகிறார்கள் .. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... ஏனென்றால் தமிழ் நட்டு கலாச்சாரம் அப்படி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை