குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, சென்னையில், இன்று துவங்குகிறது.
சோழிங்கநல்லுாரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில், இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட, 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் செய்முறை திட்டங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இன்று மாலை, 4:00 மணிக்கு, அறிவியல் விழிப்புணர்வு பேரணியை, மாணவர்கள் நடத்த உள்ளனர். இதில், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு, மாநாடு துவங்குகிறது. சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன தலைவர், ரெமிபாய் ஜேப்பியார் தலைமை வகிக்கிறார். துணை தலைவர், மேரி ஜான்சன், இணை வேந்தர், மரியஸீனா ஜான்சன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர், கே.கே.விஜயன், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர், ஸ்ரீகாந்த் பிரசாத் திரிபாதி மற்றும் மத்திய, 'ஆயுஷ்' அமைச்சகத்தின், தேசிய சித்தா நிறுவன இயக்குனர், வி.பானுமதி உள்பட, பலர் பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X