மும்பையில் தஷ்வந்த் தப்பியோட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மும்பையில் தஷ்வந்த் தப்பியோட்டம்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (2)
Advertisement
மும்பையில் தஷ்வந்த் தப்பியோட்டம்

சென்னை: தாயை கொன்று நகையுடன் தலைமறைவான கொடூரன் தஷ்வந்த், மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு போலீஸ் பிடியில் இருந்து தப்பினான்.
சென்னை, மவுலிவாக்கத்தைச் சேர்ந்த, 6 வயது சிறுமி ஹாசினியை, பிப்., 5ல், பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மென்பொறியாளர் தஷ்வந்த், 24, என்ற கொடூரன் கைது செய்யப்பட்டான். அவன் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் அலட்சியம் காட்டியதால், சென்னை உயர் நீதிமன்றம், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. சிறையில் இருந்து ஜாமினில் வந்த அவன், குன்றத்துார், சம்பந்தம் நகரில், பெற்றோருடன் வசித்தான். டிச., 2ல், பணம் தர மறுத்த தாய் சரளாவை, 45, இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்து, 25 சவரன் நகைகளுடன் தலைமறைவானான். சென்னை, கோயம்பேட்டில் இருந்து, பஸ்சில், பெங்களூரு வழியாக மும்பை சென்று, செம்பூர் பகுதியில், விபசார தொழில் செய்யும் பெண்களுடன் பதுங்கி இருந்தான். அவனை தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவனை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
நேற்று மாலை, தஷ்வந்த்தை போலீசார், மும்பை பாந்த்ரா பகுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், பிலாஸ்பூர் காவல் நிலையம் அருகே உள்ள, ஓட்டல் அறைக்கு அழைத்து வந்தனர். இரவு, 10:30 மணிக்கு விமானம் என்பதால், போலீசார், இரவு உணவு முடித்து கிளம்பலாம் என, திட்டமிட்டு இருந்தனர்.அப்போது, போலீஸ் பிடியில் இருந்து, தஷ்வந்த் தப்பினான். அவனை போலீசார் மடக்கிப்பிடிக்க முயன்றனர். அவனை துரத்துவது போலீசார் என, தெரியாமல், பொது மக்கள், தஷ்வந்துக்கு ஆதரவாக செயல்பட துவங்கினர்.
பின், தப்பிச்செல்வது கொலைகாரன் என, தெரியவந்ததும், போலீசாருடன் சேர்ந்து பொது மக்களும் அவனை பிடிக்க முயன்றனர். ஆனால், அவன், மும்பை விமான நிலையம் அருகே மாயமாகிவிட்டான். அவனை சுட்டுப்பிடிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக, உள்ளூர் போலீசார் உதவியுடன், தமிழக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அவனை வரும், சனிக்கிழமை, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கவும் திட்டமிட்டு இருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
08-டிச-201711:52:43 IST Report Abuse
Devanatha Jagannathan இவனை என்கவுண்டர் செய்ய தோதாக உட்டுட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel
V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்
08-டிச-201708:13:14 IST Report Abuse
V .வெங்கடேஷ் இவனுக்கு கொடூர தண்டனை வழங்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் ஒன்றுமறியாத குழந்தையை கேவலம் ஒரு கண நேர காமசுகத்துக்கும் பெற்ற தாயை பணத்திற்கு கொலை செய்யும் அளவிற்கு ஒரு இளைஞன் வளர்ந்து நிற்கிறான் என்றால் இது நிச்சயம் ஒரு சமூக பிரச்சனையாக பார்க்க வேண்டும். இது போன்ற பர்வர்ட்டுகள் உருவாக என்ன காரணம், அவர்களை அடையாளம் காண்பது எப்படி அவர்கள் இது போல விபரீதமான செயல்களில் இறங்குவதற்குள் அவர்களை தடுப்பது எப்படி என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். ஒரு காலத்தில் மறைந்து மறைந்து யாருக்கும் தெரியாமல் பிளாட்பாரத்தில் வாங்கி படிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகள், கருப்பு வெள்ளை கவர்ச்சி படங்கள் எல்லாம் இன்றைக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லும் நிலைக்கு போர்னோகிராபி கையடக்க செல்போனுக்குள் வந்துவிட்டது. செக்ஸ் என்பது ஊறுகாயை போல கொஞ்சமே கொஞ்சம் தொட்டுக்கொண்டு வம்சவிருத்திக்கான வழி மட்டுமே என்பதை பள்ளி கூடங்களின் சொல்லிக்கொடுக்க மறந்ததே இது போன்ற நிலைமைக்கு முக்கிய காரணம். மேலும் ஒரே குழந்தை என ஓவர் செல்லம் கெடுத்து குட்டிச்சுவராக்கும் பெற்றோர் அவன் அறிவில் வளராது உருவில் வளர்ந்து நிற்கும் போது என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கின்றனர். குழந்தைகள் வழி தடுமாறி போகின்றன. மாற்றங்கள் நம்மிடமிருந்து ஆரம்பிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை