மருத்துவமனையில் ஜெ.,வை ஒரு முறை கூட... 'சந்திக்கவில்லை'; அரசு டாக்டர்கள் குழுவினர் வாக்குமூலம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மருத்துவமனை,Hospital, அரசு டாக்டர்கள்,Government Doctors, வாக்குமூலம், Confession, விசாரணை கமிஷன்,invetigation Commission,நீதிபதி ஆறுமுகசாமி, Judge Arumugasamy,தி.மு.க சரவணன்,DMK Saravanan, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா, former medical education director Vimala, நாராயணபாபு , Narayana Babu,மருத்துவ குழு ,Medical team,ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ,Jayalalithaa brother daughter Deepa,தீபா கணவர்,Deepa husband, மாதவன், Madhavan,எய்ம்ஸ் மருத்துவர்கள் ,AIIMS doctors சசிகலா, Sasikala, ஜெயலலிதா கைரேகை, Jayalalithaa fingerprint,சிகிச்சை, treatment, ஜெயலலிதா,Jayalalitha,

ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காக, அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர்களில், நான்கு பேர், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், விசாரணையின் போக்கில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை,Hospital, அரசு டாக்டர்கள்,Government Doctors, வாக்குமூலம், Confession, விசாரணை கமிஷன்,invetigation Commission,நீதிபதி ஆறுமுகசாமி, Judge Arumugasamy,தி.மு.க சரவணன்,DMK Saravanan, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா, former medical education director Vimala, நாராயணபாபு , Narayana Babu,மருத்துவ குழு ,Medical team,ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ,Jayalalithaa brother daughter Deepa,தீபா கணவர்,Deepa husband, மாதவன், Madhavan,எய்ம்ஸ் மருத்துவர்கள் ,AIIMS doctors சசிகலா, Sasikala, ஜெயலலிதா கைரேகை, Jayalalithaa fingerprint,சிகிச்சை, treatment, ஜெயலலிதா,Jayalalitha,


நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், ஜெ., மர்ம மரணம் குறித்து, விசாரித்து வருகிறது. முதல் வாரம், தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டது.

கைரேகை:


ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கண்காணிப்பதற்காக, அரசு தரப்பில், மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அதில், சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர், கலா, மருந்தியல் துறை துணை பேராசிரியர், முத்துசெல்வன், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், தர்மராஜன்... பொது மருத்துவத் துறை பேராசிரியர், டிட்டோ, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், பாலாஜி ஆகியோர், இடம் பெற்றிருந்தனர்.

குழு ஒருங்கிணைப்பாளராக, பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தான் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் அங்கீகார படிவத்தில், ஜெ.,விடம் கைரேகை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. குழுவில் இடம்பெற்று இருந்த மருத்துவர்களிடம், இந்த வாரத்தில் விசாரணை நடந்து வருகிறது.

முதல் நாள் விசாரணையில், கலா, முத்துசெல்வன் ஆகியோர் ஆஜராகினர். மறுநாள் விசாரணையில், மருத்துவர் டிட்டோ, ஜெ., அண்ணன் மகள், தீபாவின் கணவர், மாதவன் ஆகியோர் ஆஜராகினர். நேற்று, மருத்துவர்கள், பாலாஜி, தர்மராஜன் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராகினர். காலை, 10:30 மணி முதல், பகல், 12:00 மணி வரை

தர்மராஜனிடமும், பகல், 12:00 மணி முதல், 1:50 மணி வரை பாலாஜியிடமும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

விசாரணையின்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்களை, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெ.,க்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை கண்காணிக்கும் குழுவில் இருந்த, ஐந்து மருத்துவர்களில், பாலாஜி தவிர, மற்ற நான்கு பேரும், 'சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ.,வை சந்திக்கவே இல்லை' என, தெரிவித்து உள்ளனர்.

மேலும், அவர்கள் கூறியுள்ளதாவது: அப்பல்லோ மருத்துவ மனையில், எங்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது; தினமும், அங்கு வந்து அமர்ந்துஇருப்போம். அவ்வப்போது வெளியிடப்படும், மருத்துவ செய்திக் குறிப்பை, ஒருவர் படித்துக் காட்டுவார். தினமும், அந்த அறையில் அமர்ந்து விட்டு, மாலையில் திரும்பி விடுவோம். ஒரு நாள் கூட, ஜெ.,வை சந்தித்தது இல்லை. இவ்வாறு, அந்த நான்கு மருத்துவர்களும், விசாரணையில் கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு மருத்துவர்கள்:


அதேநேரத்தில், ஜெ.,விடம் கைரேகை பெற்றபோது, தானும், சசிகலாவும் மட்டுமே, அந்த அறையில் இருந்ததாக, மருத்துவர் பாலாஜி மட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் மட்டுமின்றி, வேலுார், ஐதராபாத், பெங்களூரு பகுதியிலிருந்தும், சிறப்பு மருத்துவர்கள், ஜெ.,க்கு சிகிச்சை அளிக்க வந்ததாக, இவர்கள் கூறிஉள்ளனர்.

வெளியூர் மருத்துவர்களை அழைத்து வரும் பணியை, பாலாஜி மேற்கொண்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவர், கிலானியை, ஜெ.,விடம் அறிமுகப்படுத்தியதாக, பாலாஜி தெரிவித்துள்ளார். ஜெ.,விடம், மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்லலாம் எனக் கூறியபோது, அவர் வர மறுத்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜியை மட்டும், மீண்டும், 27ம் தேதி, விசாரணைக்கு வரும்படி, ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெ.,வை பார்க்க, அரசு நியமித்த மருத்துவர் குழுவினரை கூட அனுமதிக்காதது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அரசு தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ், அரசு ஆலோசகராக

Advertisement

இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த, விசாரணை கமிஷன் முடிவு செய்து உள்ளது.

தீபக்கிற்கு, 'சம்மன்':

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், முக்கிய நபர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி வருகிறது. 'அக்குபஞ்சர்' மருத்துவர் சங்கர், 12ம் தேதி; ஜெ., அண்ணன் மகள், தீபா, 13; அவரது தம்பி தீபக், 14; தீபாவின் கணவர் மாதவன், 15; மருத்துவர் மகேந்திரன், 19; முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், 20; முன்னாள் அரசு தலைமைச் செயலர், ராமமோகன ராவ், 21ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சொன்னது என்ன?

''நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்தேன்,'' என, மருத்துவர் பாலாஜி தெரிவித்தார். அவர் கூறுகையில், ''விசாரணை கமிஷனில், நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும், பதில் கூறினேன். எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர், பீலே வருகை குறித்து கேட்டார். அதற்கு, பதில் அளித்தேன். ஜெ.,க்கு அளிக்கப்பட்ட உணவு குறித்து கேட்டதற்கும், பதில் கூறினேன்,'' என்றார்.ஆனால், ஜெ., கைரேகை குறித்து கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்க, பாலாஜி மறுத்து விட்டார்.

பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு?

ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், கமிஷனின் பதவிக் காலம், இம்மாதம் நிறைவு பெற உள்ளதால், ஆறு மாதங்கள் நீட்டிப்பு கோரப்பட்டுள்ளது. ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைத்து, செப்., 25ல், தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை கமிஷன், மூன்று மாதங்களுக்குள், அறிக்கை அளிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டிருந்தது. விசாரணை கமிஷன், தற்போது தான் விசாரணையை துவக்கி உள்ளது; இன்னும் ஏராளமானோரிடம் விசாரணை நடத்த உள்ளது. இந்நிலையில், விசாரணை கமிஷனின் பதவிக்காலம், டிச., 24ல் நிறைவு பெறுகிறது. எனவே, விசாரணை கமிஷன் பதவி காலத்தை, மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்க கோரி, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தமிழக அரசு, அதை ஏற்று, கமிஷனின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (94)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Ray - Chennai,இந்தியா
08-டிச-201723:31:59 IST Report Abuse

Rayஒருங்கிணைந்த ஸ்க்ரிப்ட் ஒற்றுமையா வசனத்தை ஒப்பிக்கிறாங்க அத்தனை ரிகர்சலாச்சே

Rate this:
Natarajan Ramamoorthy - Chennai,இந்தியா
08-டிச-201723:03:55 IST Report Abuse

Natarajan Ramamoorthyஅப்பொல்லோவின் அறிக்கையும், மத்திய மருத்துவ குழுவின் அறிக்கையும் ஒரு முக்கிய விவரத்தை முன் வைத்திருக்கிறார்கள். அதவது, ஜயலலிதா அம்மையார், அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடைய இரத்ததில் பிராணவாயுவின் பங்கு 49 சத விகிதமாக இருந்தது என்று. 88 சத விகிதத்தின் கீழே குறைந்தால் நினைவு தவறி, மூளையின் ஆற்றல் குறைந்து, ஆழ் நிலை மயக்கத்திற்கு உட்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வாறு இருக்க மூன்று மாத காலமாக விழிப்புணர்வுடன் இருக்க வாய்ப்பில்லை. மூன்று மாத காலம் நினைவு திரும்பாமலேயே அவர் படிப்படியாக உருப்புக்களின் செயல் திறனை இழந்து, பின்பு மாரடைப்பால், அறிக்கையில் கூறப்பட்டது போல், இறந்திருக்க வேண்டும். இந்த கருத்து அறிக்கையின் அடிப்படையில் தான் தெளிவாகிறது. அவ்வாறு இருக்க, எவரையும் அனுமதித்து இருக்க வாய்ப்பில்லை. எழும் கேள்வி ஒன்று தான். 49 சதவிகிதம் வரை குறைந்து உணர்வின்றி இருக்கும் ஒருவர் முதல் அமைச்சர் ஆக இருக்க தகுதி அற்று இருக்கும் நிலையில், அவருடைய உடல் நிலை ஏன் அரசு மருத்துவர்களால் கண்காணிக்கப் படவில்லை? அவர் யார் கண்காணிப்பில் இருந்தார்? அப்பொழுது யார் ஆட்சி புரிந்தார்கள்? எவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன? இக்கேள்விகள் ஒருவரால் தான் விடை கூற இயலும். அவர் இப்போது சிறையில் உள்ளார். ஆளுனர் கூட மருத்துவமனையில் காணச்சென்று கொடுக்கபட்ட அறிக்கையில், மருத்துவர்கள் முடிந்தவரை சிறப்பாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் கூறினாரே தவிர, அவர் அந்த அம்மையாரினை பார்த்ததாகவோ, சுயநினைவுடன் இருப்பதாகவோ நேர்காணலிலோ, அறிக்கையிலோ கூறவில்லை என்பது உண்மை. இந்த நீதிபதி, அப்போது இருந்த ஆளுனரையும் அல்லவா விசாரனை செய்ய வேண்டும்? இவ்வலை இன்னும் பெரியதாக விரிய வாய்ப்பு இருக்கிறது. மூடி மறைக்கப்படாமல் இருந்தால். ஆனால், இது ஒரு கண் துடைப்பு விசார்னை என்று அனைவருக்கும் தெரிந்ததே காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் அந்த அம்மையாரிடம் வைத்திருந்த மரியாதை மற்றும் நம்பிக்கை, குற்றவாளி என்ற தீர்ப்பில், தவிடு பொடியானது என்பதில் எந்த மற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை.

Rate this:
V Nath - PCMC,இந்தியா
08-டிச-201722:17:54 IST Report Abuse

V Nathஇந்த டாக்டர் பாலாஜி சொல்வது கூட உண்மையில்லை என்றே தோன்றுகிறது. இடைத்தேர்தல் நாமினேஷன் படிவங்களில் ஜெயலலிதாவின் வலது கை ரேகைக்கு (இடது கைவிரல் ரேகை அல்ல) அட்டெஸ்டேஷன் செய்தது இந்த பாலாஜிதான். அவரது முன்னிலையில் கைரேகை எடுக்கப்படவில்லையென்றும் ஏற்கனவே சசிகலா எடுத்து வைத்திருந்த படிவங்களை மட்டும் தன்னிடம் கொடுத்ததாகவும் அதில்தான் அட்டெஸ்ட் செய்து கையெழுத்திட்டதாக சொல்லியிருந்தார். அட்டெஸ்டேஷன் என்பது signed before me என்றுதான் செய்வார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அப்படியில்லை. பாலாஜி முன்னிலையில் கைரேகை பெறவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறெனில் அந்த நாமினேஷன் மொத்தமும் செல்லாதது அல்லவா? தேர்தல் கமிஷனையும் விசாரிக்கவேண்டும்

Rate this:
Nagendran Masanam - THIRUPPUVANAM,இந்தியா
08-டிச-201721:57:59 IST Report Abuse

Nagendran Masanamசசிகலா கணவர் நடராஜின் திமுகவில் இருந்து வந்தவர் அடுத்வங்கள எப்படி கவுக்கலாம் மனைவிக்கு சொல்லிக் கொடுத்த, செயல்பாடு விபரிதமா நடந்து விட்டது ஜே கொலை, - நம்ம நம்பி ஓட்டு போட்டது திமுக- அதிமுக- மட்டும்தான் இந்த இரண்டுபேரும் பிராந்தி கடைக்கு கூட்டணி / மக்கள் மத்தியிலே எதிரி கட்சிகள் - பிராந்திகடையை எடுங்க காந்தி மாதிரி ஒருவர் போரட்ட நடத்தி மக்களுக்காக இறந்தார் அத மக்கள் வேடிக்கை பார்த்தாங்கா, எவனையும் மற்றும் மக்களைம் இந்த இரண்டு கலவாணி மதிக்கிறதே இல்லை ஓட்டு கேட்கும்போது நான் உங்கள் தாய்- இல்லை நான் உங்களின் கட்டுமரம் என கூவி அனைத்து மக்களும் குடி போதையுடன் வாழுங்கள் உங்கள் இரத்த த்தை பணமாக உறிஞ்சிக் குடிக்கின்றோம் என்று இரண்டு கலவாணி குடிச்சுச்சு..-கடவுள் கூடவே ஆளவச்சு 6 அடி பள்ளத்தை தோண்டிட்டாறு / இன்நொருத்தருக்கு தான் பிள்ளைகள் மூலமாக கட்டு மரத்த கொள்ளி வைக்க நாள் குறிச்சிருக்காரு அதனால சசிகலா கடவுளாள அனுப்பப்பட்ட நல்ல அரக்கி

Rate this:
a.s.jayachandran - chidambaram,இந்தியா
08-டிச-201721:23:03 IST Report Abuse

a.s.jayachandranயாரையும் விசாரணை செய்யவேண்டாம் டாக்டர் .பாலாஜி அவர்களை மட்டும் விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும் அல்லது தீபக்கை விசாரிக்க வேண்டும் கண்டிப்பாக உண்மை வெளிவரும்.விசாரணை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் .

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
08-டிச-201721:02:31 IST Report Abuse

raghavanசமாதியை உடைத்து கால் இருக்கிறதா இல்லையா என்று சோதித்தால் சந்தேகம் உறுதியாகிவிடும்.

Rate this:
murugan - chennai,இந்தியா
08-டிச-201719:54:39 IST Report Abuse

muruganஒரு முதல்வர் மருத்துவமனையில் நீண்ட காலம் இருந்தார். அவர் உடனே இறக்கவில்லை. நீண்டகாலம் மருத்துவமனையில் இருந்தபோது இடைக்கால முதல்வர், தமிழக கவர்னர், இந்திய உள்துறை, இந்திய உளவுத்துறை, இந்திய பிரதமர் என்ன செய்தார்கள்? அனைவரும் சேர்த்து ஒரு முதல்வரை கொன்றார்களா?

Rate this:
rcsn - Chennai,இந்தியா
08-டிச-201722:11:14 IST Report Abuse

rcsnமுதல்ல செப்டம்பர் 22 தேதியே வந்த அந்த ஐயரை விசாரிக்கணும். அங்கே என்ன வேலை அவருக்கு? எதற்கு வந்தார் என்று விசாரிக்கணும். எப்படி அவரை மட்டும் போலீஸ் கார் சைடு வழிய போங்க அப்டின்னு சொன்னாரு? ஒழுங்கா விசாரிச்சு உண்மையை கொண்டாங்கப்பா...

Rate this:
elangovan - TN,இந்தியா
08-டிச-201719:07:43 IST Report Abuse

elangovanAmmas death was very clear it was preplanned murder by Prime suspect Sasi and family. State and central government not taken care this because it is political murder . Every one was acting and given key by Sasi including EPS and OPS and those who all are given press meeting outside the hospital to be enquired first how they can give wrong information to the public. There is no doubt it is murder. Sasi and family criminals all are to be punished . God arumugadamy will enquir in good manner to punish all these criminals

Rate this:
karthi - chennai,இந்தியா
08-டிச-201718:07:36 IST Report Abuse

karthiIt is very clearly appears that Sasikala didn't allowed any body including OPS, Governer etc., to see Jayalalita. It is very frightening to note that a Chief Minister for 8 Crore people was under the control of a servant maid. Very sad.

Rate this:
Malaichaaral - Ooty,இந்தியா
08-டிச-201716:49:20 IST Report Abuse

Malaichaaralஜெயலலிதாவை சித்ரவதை செய்து கொன்றுவிட்டார்கள்.. மத்திய அரசும், அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை..

Rate this:
மேலும் 83 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement