தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை கண்காணிக்க ஓய்வு நீதிபதி நியமனம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை கண்காணிக்க ஓய்வு நீதிபதி நியமனம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆர்.எஸ்.ராமநாதனை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தயாரிப்பாளர்கள், கிஷோர், வடிவேல் ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம், 10ல், நடிகர் விஷால் தலைமையில், சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவில், தேர்தல் ஓட்டுரிமை தொடர்பாக, சங்க விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அதில், 'மூன்று படங்களை தயாரித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை' என, திருத்தம் செய்தால், சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள, 1,000க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவர். இதனால், சிறு தயாரிப்பாளர்களின் ஓட்டுரிமை பாதிக்கப்படும். எனவே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு: பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது. ஆனால், பொதுக்குழுவை கண்காணிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆர்.எஸ்.ராமநாதன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு, சங்க உறுப்பினர்கள் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடையாள அட்டை உள்ள உறுப்பினர்கள் மட்டும், பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டும்.பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்கள், இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட்டது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை, 13க்கு தள்ளி வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை