சினிமா பாணியில் சிறுமி கடத்தல் : பிளஸ் 1 மாணவன் கைது| Dinamalar

சினிமா பாணியில் சிறுமி கடத்தல் : பிளஸ் 1 மாணவன் கைது

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சண்டிகர்: சினிமா பாணியில், பணத்திற்காக, 5 வயது சிறுமியை கடத்தி கொலை செய்த, பிளஸ் 1 மாணவனை, போலீசார் கைது செய்தனர். பா.ஜ.,வைச் சேர்ந்த, மனோகர்லால் கட்டார் முதல்வராக உள்ள, ஹரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த, வியாபாரி, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த நபரை, தன் கடையில் பணியமர்த்தியுள்ளார். அவருக்கு, தன் வீட்டின் அருகில் உள்ள வீட்டை, வாடகைக்கு விட்டுஉள்ளார். இந்நிலையில், கடையில் பணியாற்றும் நபர், தன் குடும்பத்தோடு, சொந்த ஊருக்கு சென்ற நிலையில், அவரின் வீட்டில் தங்கியிருந்த, பிளஸ் 1 படிக்கும் உறவுக்கார சிறுவன், கடை முதலாளியின், 5 வயது மகளை கடத்தினான்.
யாருக்கும் தெரியாமல், அவன் தங்கியிருந்த வீட்டில், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தான். சிறுமி மயங்கியதும், அவளை, வாட்டர் கூலரில் அடைத்து வைத்தான். பின், சிறுமியின் வீட்டிற்கு போன் செய்த அவன், 20 லட்சம் ரூபாய் கொடுத்தால், மகளை விடுவிப்பதாக, சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தான். இதையடுத்து, போலீசார், அவனை கைது செய்தனர். பணம் சம்பாதிப்பதற்காக, சினிமா படத்தில் வரும் காட்சியை பார்த்து, சிறுமியை கடத்தியதாகவும், எதிர்பாராத விதமாக அவள் இறந்துவிட்டதாகவும், சிறுவன் தெரிவித்தான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X