லஞ்சம் பெற்ற வழக்கில் 'மாஜி'க்கள் ஆஜராக உத்தரவு| Dinamalar

லஞ்சம் பெற்ற வழக்கில் 'மாஜி'க்கள் ஆஜராக உத்தரவு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: பார்லிமென்டில் கேள்வி கேட்க, லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் எம்.பி.,க்கள், 11 பேருக்கு எதிராக, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'அவர்கள் அனைவரும், அடுத்த மாதம் நடக்கவுள்ள விசாரணையில் ஆஜராக வேண்டும்' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ., ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், 11 பேர், பார்லிமென்டில் கேள்வி எழுப்புவதற்காக, லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. 2005ல், இது குறித்த வீடியோ பதிவு வெளியானதை அடுத்து, அவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 11 பேர் மீதும், கிரிமினல் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும், அடுத்த மாதம், 12 முதல் துவங்கும் விசாரணையில், நேரில் ஆஜராக, டில்லி சிறப்பு கோர்ட் நீதிபதி, கிரன்பன்சால் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X