100 கோடி ரூபாய் அரசு நிதி முறைகேடு : கட்டுமான நிறுவன அதிபர் மீது வழக்கு| Dinamalar

100 கோடி ரூபாய் அரசு நிதி முறைகேடு : கட்டுமான நிறுவன அதிபர் மீது வழக்கு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஜார்க்கண்டில், அரசுப் பணம், 100 கோடி ரூபாய், தனியார் கட்டுமான நிறுவன கணக்கிற்கு மாற்றப்பட்டது தொடர்பாக, கட்டுமான நிறுவன அதிபர் மற்றும் வங்கி உதவி மேலாளர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பரிவர்த்தனை : ஜார்க்கண்டில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ரகுபர்தாஸ் முதல்வராக உள்ளார். ஆக., 5ல், மாநில அரசின் மதிய உணவு திட்டத்திற்கான நிதியிலிருந்து, 100 கோடி ரூபாய், பானு கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. எஸ்.பி.ஐ., வங்கி கிளையிலிருந்து, இந்த பரிவர்த்தனை நடந்தது தெரிய வந்ததை அடுத்து, இது குறித்த விசாரணைக்குஉத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தனியார் கட்டுமான நிறுவனத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், கட்டுமான நிறுவன அதிபர், சஞ்சய் குமார் திவாரி, அவரது கூட்டாளிகள், சுரேஷ் குமார், அஜய் ஒரானோ மற்றும் எஸ்.பி.ஐ., வங்கியின், ஹடியா கிளையைச் சேர்ந்த உதவி மேலாளர் உள்ளிட்டோர் மீது, அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

'சஸ்பெண்ட்' : இதையடுத்து, வங்கி உதவி மேலாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அரசுப் பணம் முறைகேடாக மாற்றப்பட்டது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை