17 பேருக்கு ஒரே கழிப்பறையா? போராடி வெற்றி பெற்ற பெண்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

17 பேருக்கு ஒரே கழிப்பறையா? போராடி வெற்றி பெற்ற பெண்

Updated : டிச 08, 2017 | Added : டிச 08, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கழிப்பறை,toilet, பெண்,women, மத்திய பிரதேசம், Madhya Pradesh,முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்,Chief Minister Shivraj Singh Chouhan, பா.ஜ.,BJP, விசாரணை , போலீஸ், police, கூட்டு குடும்பம், joint family, மருமகள்,daughter-in-law,மாமியார், mother-in-law,மாமனார், father-in-law

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில், கூட்டு குடும்பத்தைச் சேர்ந்த, 17 பேர், ஒரே கழிப்பறையை பயன்படுத்துவதை எதிர்த்து, அந்த குடும்பத்தின் மருமகள், போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் உதவியுடன், கூடுதலாக மேலும் ஒரு கழிப்பறை, அந்த வீட்டில் கட்டப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹர்தா என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில், 17 பேர் உள்ளனர். இவர்கள், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். இவர்களின் பயன்பாட்டுக்கு, ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

அந்த இளைஞரின் மனைவி, 'குடும்பத்தில் உள்ள, 17 பேரும் ஒரே கழிப்பறையை பயன்படுத்துவதில் பிரச்னை உள்ளது. அதனால், வீட்டில் மேலும் ஒரு கழிப்பறை கட்ட வேண்டும்' என, மாமியார், மாமனாரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்; ஆனால், அவர்கள் இதை ஏற்கவில்லை. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், அந்த பெண், கடுமையாக தாக்கப்பட்டார். இதையடுத்து, அவர், போலீசில் புகார் அளித்தார்.

விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண்ணின் மாமியார், மாமனார் மற்றும் குடும்பத்தினரிடம் பேச்சு நடத்தி, கூடுதலாக ஒரு கழிப்பறை கட்டும்படி கூறினர். இதற்கு தேவையான உதவியை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து, போலீசார் உதவியுடன், அந்த வீட்டில் மேலும் ஒரு கழிப்பறை, தற்போது கட்டப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
08-டிச-201713:52:13 IST Report Abuse
அப்புஜி கழிப்பறையை அதிகமாக்க வேண்டாம்...பெற்றுக் கொள்வதைக் குறையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-201706:14:50 IST Report Abuse
ushadevan எதற்கு தான் போலீஸ் பாதுகாப்பு என்ற வரைமுறை இல்லையா? சின்ன பிரச்சனைக்கு கூட பேசி முடிவு எடுக்க முடியாத குடும்பத்திறகு பெயர் கூட்டு குடும்பமா?
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-டிச-201712:57:09 IST Report Abuse
Sanny யோவ் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியிருக்காங்க, அந்த பொண்ணு யாரிடம் முறையிடும்....
Rate this:
Share this comment
Cancel
AR -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-201705:42:06 IST Report Abuse
AR இது மோடியால் மட்டுமே நடந்த மகா பெரிய சாதனை. என்ன தினமலர் அவர்களே நான் சொல்வது சரிதானே
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
08-டிச-201705:28:48 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வீட்டுல டாய்லெட் கட்டுவதற்கு கூட இவங்களுக்கு அரசு உதவி தேவை, ??
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-டிச-201713:00:20 IST Report Abuse
Sanny எதுக்கும் நீங்களும் கேட்டுப்பாருங்க சார்....
Rate this:
Share this comment
Cancel
murugesan - kuwait city,குவைத்
08-டிச-201701:08:16 IST Report Abuse
murugesan நல்லா வருவீங்க வீட்டில கக்கூஸ் கட்டுனது ஒரு செய்தியா ?
Rate this:
Share this comment
08-டிச-201705:11:56 IST Report Abuse
RajendranVeluஅடக்குமுறையை உடைத்தெரிந்த பெண்,இங்கு அதுதான் சொல்லப் பட்டுள்ளதாம்....
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-டிச-201707:01:37 IST Report Abuse
Rajendra Bupathiஏன் செய்திஒங்க வீட்டுலே இருந்து வந்தாதான் செய்தியா?சரி போட்டுடுவோம்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை