மல்லையா மீது வழக்கு : மத்திய அரசு உறுதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மல்லையா மீது வழக்கு : மத்திய அரசு உறுதி

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : 'தொழிலதிபர், விஜய் மல்லையா செய்த மோசடி தொடர்பாக, உறுதியான ஆதாரங்கள் உள்ளன' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபரான, விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்காமல், பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பி ஓடினான். அவனை, இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சியை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, பிரிட்டனில் உள்ள, வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது. சமீபத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'மல்லையா, பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, இந்தியாவிடம் எந்த ஆதாரமும் இல்லை' என, அவனது சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் வாதிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இது தொடர்பாக, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், 'விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான உறுதியான ஆதாரங்கள், அரசிடம் உள்ளன. இதன்படி, மல்லையாவுக்கு எதிராக, கடுமையான சட்டப் பிரிவுகளில், வழக்கு தொடர முடியும்' என்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ramachandran - Sundivakkam,இந்தியா
08-டிச-201708:23:41 IST Report Abuse
R Ramachandran மல்லையா தப்பித்து ஓடுவதற்கு வழி செய்துவிட்டு நாட்டை ஏமாற்றுகின்றனர் அரசாங்கத்தில் இருப்பவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை