அம்பேத்கரின் பங்களிப்பை மழுங்கடித்தனர்: மோடி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அம்பேத்கரின் பங்களிப்பை மழுங்கடித்தனர்: மோடி

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அம்பேத்கரின் பங்களிப்பை மழுங்கடித்தனர்: மோடி

புதுடில்லி: ''அம்பேத்கரின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டவர்கள், அவர் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை மழுங்கடிக்கச் செய்தனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டில்லி ஜன்பத் பகுதியில், அம்பேத்கர் சர்வதேச மையத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது: கடந்த, 1992ல், இந்த மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 23 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2015ல், இந்த மையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, இந்த மையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டவர்கள், அவர் நாட்டுக்கு செய்த சேவை, பங்களிப்பை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளாதபடி அழிப்பதற்கு முயற்சித்தனர். ஆனாலும், அவரது கொள்கைகளுக்கு உள்ள வலிமை, அந்த எதிர்ப்புகளை மீறி, மக்களை அடைகிறது. அம்பேத்கரின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தியவர்களுக்கு கூட, இதுபோன்ற ஒரு மையம் அமைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரியாமல் போனது தான் வேதனை.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை