ஜப்பானில் தமிழர்கள் வாழ்ந்த சுவடு; மலேசியா பல்கலை பேராசிரியர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜப்பானில் தமிழர்கள் வாழ்ந்த சுவடு; மலேசியா பல்கலை பேராசிரியர் தகவல்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (6)
Advertisement
ஜப்பானில் தமிழர்கள் வாழ்ந்த சுவடு; மலேசியா பல்கலை பேராசிரியர் தகவல்

சிவகாசி : ''ஜப்பானில் தமிழர்கள் வாழ்ந்த சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,'' என மலேசியா மலாயாப் பல்கலை இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் குமரன் தெரிவித்தார்.

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் 'உலகளாவிய தமிழ்-காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் பொருண்மைகளும் புதுமைகளும்' என்ற தலைப்பில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: கடைச்சங்க நுால்களில் தோண்ட தோண்ட புதிய கருத்துக்கள், சிந்தனைகள் கிடைக்கும். 7ம் நுாற்றாண்டில் அரசவை புலவர்களால் பாடப்பட்ட மூன்று வரிக்கவிதைகளில், ஜப்பானில் தமிழர்கள் வாழ்ந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிகளை அடிச்சுவடாக வைத்து ஜப்பானில் ஆய்வு செய்த போது தமிழர்கள் தரை, கடல் வழியாக சென்றது தெரியவந்துள்ளது.


ரூனா காலண்டர்:

நம் நாகரிகமும், பழக்க வழக்கமும் ஜப்பானில் தொன்மை மாறாது கடைப்பிடிக்கப்பட்டு வருவதே இதற்கு சான்று. ஜப்பான் பெண் தெய்வங்களில், தமிழ் பெண் தெய்வங்களின் கைகளில் இருப்பது போல் கருவிகள் உள்ளன. நம் பொங்கல் பண்டிகையை போல, ஜப்பானின் ரூனா காலண்டரில் ஜன.,14,15,16 ல் விவசாயம் செழிக்க பண்டிகை கொண்டாடுகின்றனர். இவ்வாறு பேசினார்.


எளிமையானது ஒலிப்பு முறை:

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முகிலை ராசபாண்டியன் பேசியதாவது: இந்திய மொழிகளில் செம்மொழி அந்தஸ்து பெற்றது தமிழ். ஆங்கிலத்திற்கு அடுத்து தமிழை கற்க உலக மக்கள் விரும்புகின்றனர். இதற்காக தமிழுக்கென அதிக இணையதளங்கள் உருவாகி வருகின்றன. உலகிலேயே தமிழுக்கு மட்டுமே இணையப் பல்கலைகழகம் உள்ளது. வ.வே.சு., ஐயர், 'வேதம் சொன்ன கதையும், வேதம் சொல்லாததையும் திருக்குறள் செல்கிறது,' என்றார். மற்ற மொழிகள் போல் தமிழ் கடினம் இல்லை. வாயை ஒலிப்புக்கேற்றவாறு திறந்தால் உடல் உஷ்ணம் பெருகும். இதனால் மறைமுக நோய்களில் இருந்தும் விடுபடுகிறோம். உலக மக்கள் தோன்றியது குமரி கண்டத்தில்தான். இவற்றை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டியது ஆய்வாளர்களின் கடமை. இவ்வாறு பேசினார்.

கல்லுாரி ஆட்சிகுழுத்தலைவர் ராமமூர்த்தி, முதல்வர் பாண்டியராஜன், இளங்கலைத் தமிழ் துறை தலைவர் இளவரசு, யாழ்ப்பாணம் பல்கலை சமஸ்கிருதத் துறைத்தலைவர் பத்மநாபன், முதுகலை தமிழ்த்துறை தலைவர் சிவனேசன் பங்கேற்றனர். பல நாடுகளை சேர்ந்த 209 ஆய்வாளர்கள் கட்டுரை சமர்ப்பித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-டிச-201720:56:15 IST Report Abuse
Rajendra Bupathi ஆமாங்க அங்க பஞ்சம் பொழைக்க போனது உண்மைதான்?இப்ப அது சரித்திரத்தின் காலசுவடா?
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-201715:16:46 IST Report Abuse
Tamilan இன்று தமிழகத்தில் உள்ள உண்மையான தமிழினம் என்று கூறிக்கொள்பவர்கள் பாதிக்கும் குறைவு. இவர் கூறும் தமிழ் எதில் அடக்கம் 50 % தமிழினத்திலா 100 % தமிழர்களிலா?
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-டிச-201715:14:07 IST Report Abuse
Tamilan தமிழர்களா இந்தியர்களா என்று இவர் எப்படி வித்தியாசம் பார்ப்பார்?. கடவுள் என்பது இந்தியா முழுவதும் இருக்கும் இந்துக்கள். ஜப்பானில் இப்பொழுதும் எப்பொழுதும் தமிழர்கள் முதல்கொண்ட இந்துக்கள் இருக்கிறார்கள். இதில் புதிதாக கண்டுபிடிக்க என்ன உள்ளது?. சிங்கப்பூர் மலேசியா இலங்கையில் அரசில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு இன்றும் தமிழர்கள் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
sri - trichy,இந்தியா
08-டிச-201714:18:34 IST Report Abuse
sri oh god there was unemployment problem that time. our people has gone abroad to search for jobs. good
Rate this:
Share this comment
Cancel
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
08-டிச-201706:53:26 IST Report Abuse
Rajendran Selvaraj நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
08-டிச-201702:34:18 IST Report Abuse
dandy இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் இந்த தமிழ் நாட்டில் தமிங்கிலீஷ் பேசும் ...மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று கண்டுபிடிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை