எச்.ஐ.வி., இருப்பதாக தவறான அறிக்கை : டில்லி மருத்துவமனைக்கு பூட்டு| Dinamalar

எச்.ஐ.வி., இருப்பதாக தவறான அறிக்கை : டில்லி மருத்துவமனைக்கு பூட்டு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: வெளிநாட்டில் வேலைக்கு போவதற்காக மருத்துவச் சான்றிதழ் கேட்டவருக்கு, எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதாக தவறாக சான்றிதழ் அளித்த, டில்லி மருத்துவமனையின், உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் ஒரு குழந்தை உயிருடன் இருப்பது, பின் தெரியவந்தது. இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த மற்றொரு தனியார் மருத்துவமனையின் அலட்சியப் போக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, சலீம் அஹமது, வளைகுடா நாடான துபாயில் பரணியாற்றுவதற்காக மருத்துவ தகுதிச் சான்று பெற, டில்லியில் உள்ள நியூடெக் மருத்துவமனையை நாடியுள்ளார். மருத்துவச் சான்றிதழில், அவருக்கு, எச்.ஐ.வி., எனப்படும், எய்ட்ஸ் பாதிப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த சலீம், டில்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு, எச்.ஐ.வி., பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. நியூடெக் மருத்துவமனையின் அலட்சியத்தால், தான் பாதிக்கப்பட்டது குறித்து, டில்லி மருத்துவக் கவுன்சிலில் அவர் புகார் அளித்திருந்தார். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், இது குறித்து, அந்த மருத்துவமனை எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய, டில்லி மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

மூடி மறைக்க முயற்சி : டில்லி - ஹரியானா எல்லையில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட, 7 வயது சிறுமி ஆதியா சமீபத்தில் உயிரிழந்தார். ஆனால்,16 லட்சம் ரூபாய்க்கான, 'பில்' கொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பிரச்னையை சுமுகமாக முடித்துக் கொள்ள பணம் தருவதாக, மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது என, சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை