'லவ் ஜிகாத்' சந்தேகத்தால் எரித்து கொலை| Dinamalar

'லவ் ஜிகாத்' சந்தேகத்தால் எரித்து கொலை

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், 'லவ் ஜிகாத்'தில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்குள்ளான நபர், கடுமையாக தாக்கப்பட்டு, உயிருடன் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒருவரை, போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர், அப்ரசுல் கான், 47. இவரது மனைவி மற்றும் மூன்று மகள்கள், மால்டாவில் வசிக்கின்றனர்.
அப்ரசுல் கான், ராஜஸ்தான் மாநிலம், ராஜஸ்மண்ட் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வேறு மதத்தைச் சேர்ந்த பெண்களை, முஸ்லிம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்யும், 'லவ் ஜிகாத்'துக்கு துணைபோவதாக, அப்ரசுல் கான் மீது, அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த, நபர் ஒருவர், அப்ரசுல் கானை கடுமையாக தாக்கினார். பின், அவரை உயிருடன் எரித்துக் கொன்றார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ பதிவு, சமூக வலைதளத்தில் வெளியானது.
இதையடுத்து, அப்ரசுல் கானின் உடலை கைப்பற்றிய ராஜஸ்தான் போலீசார், அவரது உறவினர்களுக்கு, இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அப்ரசுலை கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர். அப்ரசுல் நிரபராதி என்றும், அவர், தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்றும், அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X