பாலஸ்தீன விவகாரம்: இந்தியா நிலை? | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாலஸ்தீன விவகாரம்: இந்தியா நிலை?

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : 'பாலஸ்தீனம் விவகாரத்தில், இந்தியாவின் நிலை என்ன என்பது பற்றி, மூன்றாவது நாடு முடிவு செய்ய முடியாது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் பிரச்னை இருக்கிறது. இங்குள்ள, ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதி, தற்போது, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகரமே, தங்கள் தலைநகர் என, இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கு, பாலஸ்தீனம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், ஜெருசலேம் நகரத்தை, இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு, பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இது குறித்து, நம் நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ரவீஸ் குமார் கூறியதாவது: பாலஸ்தீன விஷயத்தில், இந்தியாவுக்கென தனி நிலைப்பாடு உள்ளது. இந்த விஷயத்தில், இந்தியாவே சுதந்திரமாக முடிவு எடுக்கும். மூன்றாவது நாடு, இது தொடர்பாக முடிவு எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான, ஒமர் அப்துல்லா கூறியதாவது: ஜெருசலேமை, இஸ்ரேல் தலைநகராக, அமெரிக்கா அங்கீகரித்து உள்ளதை, இந்தியா ஏற்கிறதா, இல்லையா என்பது தான், தற்போதைய கேள்வி. வெளியுறவுத் துறை, பூசி மெழுகுவது போல் பதிலளித்துள்ளது, ஆச்சரியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை