4 அங்குலம் உயரத்தில் தங்க கிறிஸ்துமஸ் மரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 அங்குலம் உயரத்தில் தங்க கிறிஸ்துமஸ் மரம்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
4 அங்குலம் உயரத்தில் தங்க கிறிஸ்துமஸ் மரம்

வேலூர்: கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, 4 அங்குலம் உயரத்தில் தங்க கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி, ஆம்பூரைச் சேர்ந்த நகைத் தொழிலாளி சாதனை படைத்துள்ளார்.
வேலூர் மாவட்டம்,ஆம்பூரை சேர்ந்தவர் தேவன், 50. நகை தொழிலாளி. தங்கத்தை பயன்படுத்தி, அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு பொருட்களை உருவாக்கியவர். திருக்குறள் புத்தகம், கிரிக்கெட் உலக கோப்பை, கால்பந்து உலக கோப்பை, முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு தங்க கம்பி உருவங்களை உருவாக்கி, சாதனை படைத்திருக்கிறார். தற்போது, 24 மணி நேரத்தில், 4 அங்குலம் உயரத்தில், தங்க கிறிஸ்துமஸ் மரத்தை தேவன் உருவாக்கியிருக்கிறார்.
இதில், ஒரு செ.மீ., அளவில் இலைகளை தயார் செய்திருக்கிறார். இதற்காக, 5.250 கிராம் குறைந்த தங்கத்தை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். '15 ஆயிரம் ரூபாய் மதிப்பில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகச் சிறிய தங்க கிறிஸ்துமஸ் மரம் இதுதான்' என்றார் தேவன்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
08-டிச-201701:24:02 IST Report Abuse
கதிரழகன், SSLC மரமா இது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை