நடிகை ஜோதிகா வழக்கு ஜன., 11ல் விசாரணை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடிகை ஜோதிகா வழக்கு ஜன., 11ல் விசாரணை

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க கோரும் வழக்கு, ஜன., 11க்கு ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ் திரைப்பட இயக்குனர் பாலா, நாச்சியார் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரில், ஜோதிகா பேசும் வசனம் ஆபாசமாக உள்ளதாக, 'இந்திய குடியரசு கட்சி - அ' மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன், கரூர் ஜே.எம்., -2 நீதிமன்றத்தில், 27ம் தேதி வழக்கு தொடர்ந்தார். அதில், நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பாக்கியம், 'ஜோதிகா பேசிய வசனத்தால், யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது' என, கேள்வி எழுப்பினார். மேலும், பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை தாக்கல் செய்யும்படி கூறி, விசாரணையை ஜன., 11க்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை