200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்!

Added : டிச 08, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே, 200 ஆண்டுகளாக கிராம மக்களின் தாகம் தீர்க்கும் ஊரணியின் நீர்வரத்துக்காக, 22.5 ஏக்கரை மூன்று குடும்பத்தினர் தானமாக அளித்துள்ளனர்.

கல்லல் அருகே, பனங்குடியில் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அந்த கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, 200 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் ஊரணி அமைத்துள்ளனர். ஊரணியை சுற்றிலும் தனியார் நிலங்கள் இருந்ததால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நீர் வரத்திற்காக, 22.5 ஏக்கர் நிலங்களை மூன்று குடும்பத்தினர் தானமாக கொடுத்துள்ளனர். நீர்நிலைகளை கூட, ஆக்கிரமிக்கும் இந்த காலகட்டத்தில் தானமாக வழங்கிய நீர்வரத்து பகுதியை, 200 ஆண்டுகளாக கிராமமக்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த பகுதியில் சீமைக்கருவேல செடிகள் முளைத்தால் கூட, கிராம மக்கள் வெட்டிவிடுவர். குப்பையும் கொட்டுவதில்லை. எந்த அசுத்தமும் செய்வதில்லை. இதனால் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் நேடியாக ஊரணியை அடைகிறது.நீர்வரத்து பாதிக்கப்படாததால் ஊரணியும் முழுமையாக நிரம்பி விடுகிறது. இதனால் அந்த ஊரணியில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். 'போர்வெல்' மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும், கிராம மக்கள் ஊரணி நீரையே சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
இதனால் ஊராட்சி நிர்வாகமும் அந்த ஊரணியை கம்பிவேலி அமைத்து பாதுகாத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
08-டிச-201704:42:14 IST Report Abuse
Milirvan அட... தமிழ்நாட்டிலா? திராவிடம் என்னும் விடம் இன்னும் ஏறாத தமிழக சிறுபகுதி போலிருக்கிறது.. சிறப்பு..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
08-டிச-201701:25:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நகரத்தார் சமூகத்தில் இது போன்ற ஊருணிகள் பிரபல்யம். இன்னும் பல ஊர்களில் காணலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை