வரி செலுத்துவதில் திருப்பூருக்கு சிறப்பிடம்வருமான வரி முதன்மை கமிஷனர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரி செலுத்துவதில் திருப்பூருக்கு சிறப்பிடம்வருமான வரி முதன்மை கமிஷனர் பேச்சு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வரி செலுத்துவதில் திருப்பூருக்கு சிறப்பிடம்வருமான வரி முதன்மை கமிஷனர் பேச்சு

திருப்பூர் : “வரி செலுத்துவதில், திருப்பூர் சிறப்பிடம் வகிக்கிறது. அதனால் தான், வருமான வரி சோதனைகள் நடத்தப்படுவதில்லை,” என, வருமான வரி முதன்மை கமிஷனர் ரெட்டி பேசினார்.
வருமான வரித்துறை சார்பில், ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம், திருப்பூர் ஆடிட்டர் அசோசியேஷன் அரங்கில் நேற்று நடந்தது.

இதில், கோவை வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் ரெட்டி பேசியதாவது:
ஆடை தயாரிப்பாளர்கள் நிறைந்த திருப்பூரில், அதிக வரி வரவுக்கான வாய்ப்பும் உள்ளது.
பிற நகரங்களில், இலக்கை அடைவதற்காக, அடிக்கடி, வருமான வரி சோதனைகள் நடத்தப்படுகிறது. திருப்பூர் தொழில் துறையினர், முறையாக வரி செலுத்துகின்றனர்.
இதனால், நிர்ணயிக்கப்படும் இலக்கை தாண்டி, வரி வசூலாகிறது. அதனால், பெரிய அளவில், வருமான வரி சோதனைகள் ஏதும், இங்கு நடத்தப்படுவதில்லை.
கடந்த, 2016 -- 17 நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கை தாண்டி வசூலிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1,200 கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடை தயாரிப்பு துறையில், சிக்கல்கள் இருந்தாலும், வரி செலுத்துவதில் தாமதம் செய்யக்கூடாது. ஜி.எஸ்.டி.,யால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொது செயலர் விஜயகுமார் பேசுகையில், “நடப்பு நிதியாண்டில், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 40 ஆயிரம் கோடியை எட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் முதல் செப்., வரையிலான ஆறு மாதங்களில், ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 12 ஆயிரத்து 500 கோடியை தான் எட்டியுள்ளது; எனவே, கடந்தாண்டை விட, 1,000 கோடி குறைவாக, 25 ஆயிரம் கோடி ரூபாயை தான் எட்டும் வாய்ப்புள்ளது,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை