லாரி மீது வேன் மோதல் : திருப்பதி சென்ற 10 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது வேன் மோதல் : திருப்பதி சென்ற 10 பேர் பலி

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருச்சி: திருப்பதிக்கு சென்ற சுற்றுலா வேன், திருச்சி அருகே லாரி மீது மோதிய விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம், 79. தொழில் அதிபரான இவரது மகன் ஈஸ்வரன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து, சமீபத்தில் நாடு திரும்பினார்.
குடும்பத்துடன் அனைவரும் ராமேஸ்வரம், திருப்பதி கோவில்களுக்கு சென்று வர, முடிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை, டெம்போ டிராவலர் வேனில், வைத்திலிங்கம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என, 14 பேர், திருப்பதிக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வந்த போது, முன்னால் ஓரங்கட்டி நின்றிருந்த போர்வெல் லாரி மீது வேன், எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில், வேனின் இடதுபக்கம் முழுவதும் சிதைந்தது. வைத்தியலிங்கம், அவரது மனைவி, மகன் ஈஸ்வரன், இவரது மனைவி, உறவினர்கள், குழந்தைகள் என, 10 பேர் உயிரிழந்தனர்.
வேன் டிரைவர் உட்பட, ஐந்து பேர் படுகாயம் அடைந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, போர்வெல் லாரி டிரைவர் சந்திரசேகரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

3 இடங்களில் அபாயம் : விபத்தில் சிக்கி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, கலெக்டர் ராசாமணி நேற்று சந்தித்து, ஆறுதல் கூறினார்.

பின், அவர் கூறியதாவது: மிக வேகமாக வேனை ஓட்டி வந்த டிரைவர், துாக்க கலக்கத்தில், லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை - சென்னை பைபாஸ் சாலையில், சில இடங்களில், அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக புகார்கள் வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குனர், போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திருச்சி - மதுரை சாலையில் துவரங்குறிச்சியிலும், திருச்சி - சென்னை சாலையில், எஸ்.ஆர்.எம்., உட்பட இரண்டு இடங்கள், அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில், எத்தகைய நடவடிக்கை எடுத்தால், விபத்துகளை குறைக்க முடியும் என, அறிக்கை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின், விபத்துகளை தடுக்க, தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை