அன்புசெழியன் முன்ஜாமின் மனு விசாரணை தள்ளி வைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அன்புசெழியன் முன்ஜாமின் மனு விசாரணை தள்ளி வைப்பு

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அசோக்குமார் தற்கொலை வழக்கில், அன்புசெழியன் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சசிக்குமாரின் உறவினரும், அவரது பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளருமான, அசோக்குமாரை, தற்கொலைக்கு துாண்டியதாக, சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மீது, வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், ஏற்கனவே முன்ஜாமின் கோரி அன்புசெழியன் தாக்கல் செய்த மனு, திடீரென திரும்ப பெறப்பட்டது. இதனால், அவரை கைது செய்ய போலீசார் தேடி வரும் நிலையில், அன்புசெழியன் தரப்பில், மீண்டும் முன்ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி, ஆதிநாதன் முன் நடந்தது. அப்போது, வழக்கில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால், வழக்கை தள்ளி வைக்க, போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை, அடுத்த வாரத்திற்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை