குழித்துறையில் மீனவர்கள் ரயில் மறியல்! : மாயமான மீனவர்களை மீட்க கோரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழித்துறையில் மீனவர்கள் ரயில் மறியல்! : மாயமான மீனவர்களை மீட்க கோரிக்கை

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

நாகர்கோவில்: 'ஒக்கி' புயலில் மாயமான மீனவர்களை மீட்க கோரி, நேற்று குழித்துறையில் மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்ய போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தவியாய் தவித்தனர்.
'ஒக்கி' புயலில் சிக்கி, 3,000த்துக்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பவில்லை என மீனவ அமைப்புகள் கூறி வந்த நிலையில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும், அதிகாரிகளும் 100, 200 என, கணக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். மாவட்ட நிர்வாகத்தாலும், சரியான கணக்கு சொல்ல முடியவில்லை.
மாயமான மீனவர்கள் பலர் இன்னும் கரை திரும்பாததால், இரவிபுத்தன்துறை, சின்னதுறை, பூத்துறை, துாத்துார் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நேற்று காலை, ௧௦:௦௦ மணிக்கு குழித்துறை ரயில் நிலையத்தில், மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக நீரோடி, மார்த்தாண்டந்துறை, வள்ளவிளை ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ஊர்வலமாக குழித்துறை நோக்கி வந்தனர்.
அவர்களை ஊரம்பு என்ற இடத்தில் போலீசார் தடுத்ததால், அங்கு மறியல் நடந்தது. பின், அவர்களும் குழித்துறை வந்தனர்.
மறியலால், திருவனந்தபுரம் -- நாகர்கோவில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மாலையிலும் போராட்டம் நீடித்தது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சி பயனளிக்கவில்லை. டி.ஐ.ஜி., கபில்குமார் சரத்கர், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.
மறியல் போராட்டம் துவங்கிய நிலையில், மதியம், 1:30 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், சில புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டது.
இதன்படி, மஹாராஷ்டிரா, லட்சத்தீவு, கர்நாடகா, குஜராத், கேரளா ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு உட்பட்ட, 15 துறைமுகங்களில், 282 படகுகளில், 2,641 பேர் கரை ஒதுங்கியுள்ளனர்.
இதில், 249 படகுகளும், 1,969 பேரும்குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெறுவதாக, தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. 'காணாமல் போனவர்களை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டும், கேரளா போன்று உதவித்தொகை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியிறுத்தினர்.
மீனவர்கள் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பங்கு தந்தை சர்ச்சில் கூறியதாவது:
கேரளாவில், முதல்வர் பினரயி விஜயன், தொடர்ந்து கடற்கரையில் முகாமிட்டு, நிவாரணம் மற்றும் தேடுதல் பணியை முடுக்கி விட்டுள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி உடனடியாக இங்கு வரவேண்டும். புயல் சேதத்தை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
இன்னும் கண்டு பிடிக்கப்பட வேண்டிய, 1,013 மீனவர்களை மீட்க, போர் கப்பலை அனுப்ப வேண்டும்.
கேரளாவை போல், இறந்தவர் குடும்பத்துக்கு, 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், சேதம் அடைந்த படகு, வலைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை