நடராஜன், 3 பேருக்கு, 'வாரன்ட்'| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடராஜன், 3 பேருக்கு, 'வாரன்ட்'

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட நான்கு பேருக்கு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், ஜாமினில் வெளி வர முடியாத, 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன், லண்டனில் இருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை, 1994ல், இறக்குமதி செய்தார்.
இந்த கார், 1994ல் தயாரிக்கப்பட்டது. பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என, போலி ஆவணங்களை தயாரித்துள்ளார். காரை இறக்குமதி செய்து, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறி, நடராஜன், பாஸ்கரன், லண்டனை சேர்ந்த பாலகிருஷ்ணன், யோகேஸ் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில், நடராஜன் உள்பட, நான்கு பேருக்கும், சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், தலா இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து, நவ., 17ல், உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, நான்கு பேரும் கைது செய்யப்படுவார் என, கூறப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில், நான்கு பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதில், 'நான்கு பேரும் சரணடைய தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நான்கு பேருக்கும், தண்டனை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நகல், சில தினங்களுக்கு முன், சி.பி.ஐ., நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், நடராஜன் உட்பட நான்கு பேருக்கும், ஜாமினில் வெளிவர முடியாத, வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'இந்த, வாரன்ட் அடிப்படையில், போலீசார் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டி, நான்கு பேரும் தப்பிவிடுவர்' என, வழக்கறிஞர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X