என் வேட்பு மனுவையே மாற்றி விட்டனர்: தீபா | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

என் வேட்பு மனுவையே மாற்றி விட்டனர்: தீபா

Added : டிச 08, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: ''என் வேட்புமனு விண்ணப்பத்தை மாற்றி உள்ளனர்,'' என, ஜெ., அண்ணன் மகள், தீபா தெரிவித்தார்.

சென்னை, ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட, தீபா, வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக, நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானியிடம், புகார் மனு கொடுத்தார்.

அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் அறிந்து, தேர்தல் நடத்தும் அலுவரை சந்தித்தேன். அவர், என் விண்ணப்பம், சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என கூறினார். எனது, 'ஒரிஜனல்' விண்ணப்பப் படிவத்தை கேட்டேன். என் வற்புறுத்தல் காரணமாக, அந்த படிவத்தை காண்பித்தனர். அதை பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தேன். நான் கொடுத்த விண்ணப்பப் படிவம், அது இல்லை. சில பக்கங்களில், சில திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. இரண்டு தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. இதில், பெரும் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, விசாரிக்கும்படி, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு கொடுத்துள்ளேன். ஆரம்பத்திலேயே, நான் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்பதில், ஆர்வம் காட்டினர். எனது வேட்புமனுவையே மாற்றி விட்டனர். அதிகாரிகள் மீது, சந்தேகம் உள்ளது. இவ்வாறு செய்வதற்கு, தேர்தல் நடத்தாமலே இருக்கலாம். அதிகாரத்தை பயன்படுத்தி, வெற்றி பெற வேண்டும் என, நினைக்கின்றனர். மூத்த அமைச்சர் ஒருவர், தனது ஆட்களை வைத்து, 'வேட்புமனுவை திரும்பப் பெறாவிட்டால், நிராகரிக்க வைப்போம்' என்றார். அந்த அமைச்சர் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elangovan - TN,இந்தியா
14-டிச-201723:44:30 IST Report Abuse
elangovan Deepa mam to correct the mistakes in future, it was the great chance was missed . If election commission support to the state and central government there is no democratic in the country. Then what is the use for election. Last time the same candidate was ed and now this time why it is rejected. The election commission returning officer to be severely punished if he was support to the parties.
Rate this:
Share this comment
Cancel
JAYARAMAN - CHENNAI,இந்தியா
08-டிச-201720:27:08 IST Report Abuse
JAYARAMAN Forms should be applied through internet for all election candidates.
Rate this:
Share this comment
Cancel
Jeeva - virudhunagar,இந்தியா
08-டிச-201718:05:00 IST Report Abuse
Jeeva Akka summa engala kena payala aakathinga ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X