தேர்தல் அலுவலரை மாற்ற தேர்தல் கமிஷன் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அலுவலரை மாற்ற தேர்தல் கமிஷன் முடிவு

Added : டிச 08, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி, தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலராக, வேலுசாமி செயல்பட்டு வருகிறார். வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, அவர் முறையாக செயல்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. நடிகர் விஷால் மனுவை, முதலில், நிராகரிப்பதாக அறிவித்தார்; பின்னர், ஏற்கப்பட்டதாக அறிவித்தார்; அதன்பின், மீண்டும் நிராகரித்தார். இதனால், குழப்பம் ஏற்பட்டது. 'விஷால் வேட்புமனுவில், ஏராளமான குழப்பம் உள்ளதால், பரிசீலனையை ஒத்திவையுங்கள்; மறுநாள் முடிவு செய்வோம்' என, அதிகாரிகள் கூறியதை, அவர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து, தேர்தல் கமிஷனுக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து, அவரை மாற்றிவிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை, தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
08-டிச-201722:08:54 IST Report Abuse
Gnanasekaran Vedachalam தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் படைத்த ஜனநாயக தூண். தேர்தல் அலுவலருக்கு ஆணையம் முழு i அதிகாரம் கொடுத்து உள்ளதால் ஆணையத்தின் மாண்பு மரியாதையை கருத்தில் கொண்டு அவர்களின் வழிகாட்டுதல் உடன் செயல் பட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை