தென்னந்தோப்பு துவம்சம் : காட்டு யானைகள் அட்டகாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தென்னந்தோப்பு துவம்சம் : காட்டு யானைகள் அட்டகாசம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தென்னந்தோப்பு துவம்சம்  : காட்டு யானைகள் அட்டகாசம்

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே, தென்னந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள், 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சூறையாடின. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, போத்தமடை வனப்பகுதியை ஒட்டிய பகுதியில், தனியார் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, மூன்று நாட்களாக,இரண்டு ஆண் யானைகள்,தென்னந்தோப்புக்குள்புகுந்து, 300க்கும் மேற்பட்ட மரங்களைசூறையாடின. பாதுகாப்புக்காக போடப்பட்ட மின் வேலியை உடைத்து, அங்குள்ள தென்னை மரங்களை சாய்த்து, அதன் குருத்துப் பகுதி, தேங்காய், இளநீர் ஆகியவற்றை சாப்பிட்டு சேதப்படுத்தின. வனத்துறையினர் யானைகளை விரட்டினாலும், இரவு நேரங்களில் மறுபடியும் தென்னந்தோப்புக்கு வந்துவிடுகின்றன. பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகள், நேற்று தென்னந்தோப்பில் யானை வந்த பாதைகளில் கண்காணிப்பு செய்தனர்.
காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டுவதற்காக டாப்சிலிப்பில் இருந்து, நான்கு, 'கும்கி' யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: காட்டு யானைகள், இங்குள்ள தேங்காய், குருத்துக்களை சாப்பிட்டு பழகியதால், அடிக்கடி வருகின்றன. இரண்டு ஆண் யானைகள், தனித்தனியாக இரவு நேரங்களில் வந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. சேதமான மரங்கள் குறித்து தோப்பின் உரிமையாளர் மனு கொடுத்தால், நிவாரணம் வழங்க பரிந்துரை செய்ய ப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X