ஏழு ஆண்டுகளில் 153 கட்டடங்களுக்கு, 'சீல்'; தூங்கி வழியும் சி.எம்.டி.ஏ., அமலாக்க பிரிவு Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'சீல்'
ஏழு ஆண்டுகளில் 153 கட்டடங்களுக்கு, 'சீல்';
தூங்கி வழியும் சி.எம்.டி.ஏ., அமலாக்க பிரிவு

சென்னையில், 2010 முதல், 2017 வரை, 153 விதிமீறல் கட்டடங்களுக்கு, 'சீல்' வைககப்பட்டு உள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், அரசுக்கு தகவல் அளித்து உள்ளனர்.

கட்டடங்கள்,Buildings, சி.எம்.டி.ஏ.,CMDA, சென்னை,Chennai,  பெருநகர் வளர்ச்சி குழுமம்,  Chennai Metropolitan Development Authority ,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, Housing and Urban Development Department,


சென்னை பெருநகர் பகுதியில், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பணி நிறைவு சான்றுக்காக விண்ணப்பித்த கட்டடங்களை ஆய்வு செய்வதற்காக, பெருநகர் வளர்ச்சி குழும மான, சி.எம்.டி.ஏ.,வில் அமலாக்கப் பிரிவு, 1985ல் ஏற்படுத்தப்பட்டது.

நகரமைப்பு சட்டத்தின் பிரிவுகள், 56, 57 ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அடிப்படையில், இப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை மட்டுமே வரன்முறை செய்ய, சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் பின், கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு, சட்ட ரீதியாக எவ்வித தடையும் இல்லை.

ஆனால், சென்னையில் சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பான விதிமீறல் புகார்கள் மீது, சி.எம்.டி.ஏ., அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இது தொடர்பான புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என, புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், சி.எம்.டி.ஏ., பணிகள் குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் கிருஷ்ணன், சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது, அமலாக்கப் பிரிவு பணிகள் தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள், உண்மை நிலவரத்துக்கு மாறாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பெருநகர் பகுதியில், 2010 முதல் தற்போது வரை, 153 கட்டடங்களுக்கு

Advertisement

சீல் வைக்கப்பட்டது. ஒரு மாதத்தில், இரண்டு கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது என, அதிகாரிகள் தகவல் அளித்தனர். ஆனால், இந்த காலகட்டத்தில், 514 விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாக, சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்துடன் சீல் வைப்பு எண்ணிக்கையை ஒப்பிட்டால், மீதியுள்ள கட்டடங்கள் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுகிறது. விதிமீறல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கைக்கும், சீல் வைக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopalsami.N - chennai,இந்தியா
12-டிச-201707:55:53 IST Report Abuse

Gopalsami.Nவரைமுறை மீறிய கட்டிடங்களை இடிக்க வேண்டும். இடிப்பதற்கு ஆகும் செலவை கட்டிடம் இடித்தபின் கட்டிட சொந்தக்காரர்கள் உடனே கொடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களின் கணக்கு முடக்கம் செய்து சொத்தை அரசு கையகப்படுத்தி வசூல் செய்யவேண்டும். இவை அனைத்தும் அதிகபட்சம் 30 நாட்களுக்குள் நடைமுறை படுத்தவேண்டும். வாய்தா கூடாது.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
08-டிச-201711:35:05 IST Report Abuse

Indhuindianதி நகருக்கு வாருங்கள் ஒரே நாளில் குறைந்தது ஐநூறு வரைமுறை மீறிய கட்டிடங்களை ஒரே நாளில் சீல் வைத்து விடலாம்

Rate this:
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
08-டிச-201709:47:44 IST Report Abuse

Sathiamoorthy.V153 கட்டிடங்களுக்கு என்பது இருக்கட்டும். மொத்தம் எத்தனை கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டு உள்ளன. இரண்டு தகவலும் இருந்தால்தான் மதிப்பிட முடியும். நடுத்தர சாமான்ய மக்கள் வீடுகட்டுவதை நிர்மூலமாக்கி விட்டு பில்டர்களை வளர்த்து விட்டவர்களுக்கு காலம் தக்க பாடம் கற்பிக்கட்டும்.

Rate this:
08-டிச-201707:57:34 IST Report Abuse

நாணாசீல் வைத்ததின் புள்ளி விவரம் கொடுக்க படுகிறது. சீல் வைத்த பின் அரசு யந்திரம் எப்படி செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா?

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-டிச-201704:02:10 IST Report Abuse

Kasimani Baskaranபணம் வசூல் செய்ய சீல் வைப்பது ஒரு தொழில்நுணுக்கம்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement