Mumbai Woman Killed Husband, Kept Body In Septic Tank For 13 Years | கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் வைத்த மனைவி கைது| Dinamalar

கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் வைத்த மனைவி கைது

Added : டிச 08, 2017 | கருத்துகள் (18)
Advertisement


மும்பை: கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகினறனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் காந்திபாடா பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த ஞாயிறன்று சோதனை நடத்தி 3 இளம் பெண்களை மீட்டனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சவீதா பாரதி,43 என்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். பைசர் போலீஸ் நிலையத்தில் வைத்து சவீதாபாரதியிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனது கணவர் உள்ளிட்ட பலரை கொன்று புதைத்துள்ள திடுக் தகவல் வெளியானது. .
உடன் அவரது வீட்டினை செவ்வாயன்று சோதனை நடத்தியதில் செப்டிக் டேங்கில் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக சடலம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். சடலத்தை மீட்ட போலீசார் அது ஆண் சடலம் என்பதும் அவர் சவீதாவின் கணவர் ஷாதேவ் 49 என்பதும் தெரியவந்தது.

சினிமாவை மிஞ்சிய இந்த திகில் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் கிரண்கபாடியா கூறுகையில், சவீதா பாரதி தனது கணவர் ஷாதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.. சவீதாபாரதிக்கு கமலேஷ் என்வருடன் இருந்த கள்ளகாதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்தது கடந்த 2004-ம் ஆண்டு கணவர் ஷாதேவ், குடிபோதையில் இருந்த போது மனைவி சவீதா பாரதி, தனது கள்ள காதலனுடன் சேர்ந்து கல்லால் தாக்கி அடித்து கொன்று செப்டிக்டேங்கில் புதைத்து வைத்ததுள்ளார். மேலும் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அவர்கள் உடலை தேடிவருகிறோம்.இவ்வாறு கிரண் கபாடியா கூறினார்.கைதான சவீதா பாரதியை போலீசார் நேற்று பல்கார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
14-டிச-201715:49:04 IST Report Abuse
Ray கொண்டு வந்தால் சகோதரி கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் கொலை செய்வாள் பத்தினி உயிர்காப்பான் தோழன் - பழங்கால சினிமா வசனம்
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
14-டிச-201710:05:30 IST Report Abuse
Rangarajan Pg இவள் ஒரு பத்தினி, அது தான் கொலை செய்து விட்டாள். அப்பாடா ஒரு வழியாக அந்த பழமொழிக்கு ஒரு மீனிங் கிடைத்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
11-டிச-201720:41:42 IST Report Abuse
Meenu ஆண்களுக்கு நிகர், சம உரிமையில் பெண்கள் உள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்திய பெண்கள் மேலைநாட்டு பெண்களை விட மேல் என்றால் இப்படித்தானோ ? இவளுக்கெல்லாம் தூக்கு தண்டனை கொடுக்கணும். கள்ளக்காதலனையும் தூக்கில் தொங்க விடணும்.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
08-டிச-201711:15:53 IST Report Abuse
Jayvee இவருக்காக வாதாட பல பெரிய தலைகள் இப்போதே ரெடியாக ullana.. கபில் சிபல் மனிஷ் tiwari, ஜெத்மலானி போன்ற சான்றோர்கள் கியூவில் உள்ளனர்
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
08-டிச-201708:40:52 IST Report Abuse
அம்பி ஐயர் ஆஹா.... இதுவல்லவோ சம உரிமை....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
08-டிச-201708:32:04 IST Report Abuse
தேச நேசன் ராஜீவ் இதுபோலதான் கொல்லப்பட்டார் இத்தனை ஆண்டுகள் கழித்தும் உண்மை குற்றவாளிகள் ராஜபோகமாக வாழ்கிறார்கள்
Rate this:
Share this comment
TechT - Bangalore,இந்தியா
09-டிச-201720:30:42 IST Report Abuse
TechTமதவெறில் ஏதாவது உளறாதீர்கள், நல்ல வேலை,ஆட்டுக்கறி விலையேறியதிற்கும் காங்கிரஸ் தான் காரணம்னு சொன்னாலும் சொல்வீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
08-டிச-201706:55:14 IST Report Abuse
தங்கை ராஜா மோகமுள்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
08-டிச-201706:50:15 IST Report Abuse
Paranthaman இவள் தான் படி தாண்டா பத்தினி.
Rate this:
Share this comment
Cancel
Scorpio - Alaska,யூ.எஸ்.ஏ
08-டிச-201706:38:57 IST Report Abuse
Scorpio வாராய் - நீ வாராய் - போகும் இடம் வெகு தூரம் இல்லை - நீ வாராய் - பெண்களுக்கு ஜீவனாம்சம் - ஆயிரம் பொற்காசுகள் - அவர்கள் கூட இருந்து கொள்ளையடிக்கும் - கருப்பு கோட்டுகள் - வாழ்க ஆண்கள் - வாழ்க வளமுடன் -
Rate this:
Share this comment
TechT - Bangalore,இந்தியா
08-டிச-201709:42:34 IST Report Abuse
TechT498A வரதட்சிணை கொடுமை போன்ற சட்டங்கள் இதுபோன்ற பெண்களுக்கே உதவுகிறது. இதுதான் உண்மை, பெண்ணுரிமை சட்டங்கள் வக்கீல்களுக்கும் போலீசுக்கும் நல்ல வருமானம் கொடுப்பதால் அவர்கள் கொண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் மேலும் இந்த மாதிரி பல சட்டங்கள் கொடூர மங்கையர் பலருக்கு உதவும், இவளும் அந்த தாயை கொன்ற முகலிவாக்கம் துஸ்வந்தும் ஒன்றுதான், ஆணென்ன பெண்ணென்ன கொடூர மனிதர்கள் இருபாலாரிலும் உண்டு....
Rate this:
Share this comment
Siva - Chennai,இந்தியா
12-டிச-201719:10:19 IST Report Abuse
Sivaவேடிக்கையாய் கருத்துக்கள் போடுவதை விட சிந்திப்பது அவசியம். இதை ஒரு ஆண் செய்து இருந்தால் டிவி களில் தலைப்பு செய்தி ஆகியிருக்கும்... ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்றால் ஒரு கூட்டமே வருகிறது .. அவள் நல்லவளா இல்லை கெட்டவளா என்று யாரும் பார்ப்பதில்லை ... பெண்களில் இவ்வளவு கொடூர குணம் உள்ளவர்கள் நெறைய பேர் உள்ளனர் .... ஒரு பெண் என்றால் உதவுகிறேன் என்று ஓடி போகாமல் இந்த சம்பவத்தை நினைத்து பார்க்கட்டும் .......
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
08-டிச-201706:00:52 IST Report Abuse
கதிரழகன், SSLC படத்த பாத்தா இம்புட்டு செய்யற ஆளு மாதிரி தெரியல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை