மைசூரு அரச குடும்பத்தினருக்கு புது வாரிசு : அரண்மனையில் மகிழ்ச்சியுடன் விழாக்கோலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மைசூரு அரச குடும்பத்தினருக்கு புது வாரிசு : அரண்மனையில் மகிழ்ச்சியுடன் விழாக்கோலம்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (2)
Advertisement
மைசூரு அரச குடும்பத்தினருக்கு புது வாரிசு : அரண்மனையில் மகிழ்ச்சியுடன் விழாக்கோலம்

மைசூரு: பல ஆண்டுகளுக்கு பின், மைசூரு அரச குடும்பத்தினருக்கு, புதிய வாரிசு பிறந்து உள்ளதால், அரண்மனை, மகிழ்ச்சி வெள்ளத்தில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூரு அரச குடும்பத்தின், யதுவீரின் மனைவி, திரிஷிகா குமாரிக்கு, நேற்று முன்தினம் இரவு, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
வாரிசு பிறந்து உள்ளதால், அரச வம்சத்தினருக்கு ஏற்பட்டிருந்த சாபம் நீங்கி உள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், மைசூரு அரச வம்சத்தின், வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால், அலமேலம்மாவின் சாபம், தத்து பிள்ளைகளை பாதிக்கவில்லை என, தெரிகிறது.
விஜய நகர பிரதிநிதியாக, ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆட்சி நடத்தி வந்த ஸ்ரீரங்கராயரை, கடும் நோய் தாக்கியது. நோயிலிருந்து நிவாரணம் பெற, அரசர், தன் மனைவி, அலமேலம்மாவுடன், தலக்காடின் வைத்தியநாதேஸ்வரர் கோவிலில், பூஜை செய்வதற்காக சென்றார்.
இதையறிந்த, மைசூரின் ராஜ உடையார், ஸ்ரீரங்கப்பட்டணத்தை ஆக்கிரமித்து வசப்படுத்தினார். இந்த வேளையில், ஸ்ரீரங்கராயர் தலக்காட்டில் இறந்து விடுகிறார். அதன்பின், அவரது மனைவி, அலமேலம்மா, தலக்காடு அருகிலுள்ள, மாலங்கி கிராமத்துக்கு சென்று வசிக்கிறார்.
அவரிடம், அபூர்வமான வைர மூக்குத்தி உட்பட, விலை உயர்ந்த நகைகள் ஏராளமாக உள்ளன.
இதை பறித்து வருவதற்காக, ராஜ உடையார், தன் ஆட்களை அனுப்புகிறார். இதையறிந்த அலமேலம்மா, கோபமடைந்து, 'மைசூரு அரச வம்சத்தினருக்கு, குழந்தையே பிறக்கக் கூடாது' என, சாபமிட்டு, நகைகளுடன் காவிரி ஆற்றில் குதித்து, உயிரை விடுகிறார்.
அவரது சாபத்தின் விளைவாக, உடையார் வம்சத்தினருக்கு குழந்தை பிறக்கவில்லை என, நம்பப்படுகிறது. சாப விமோசனத்தை போக்க, ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, அரண்மனை அருகில், அலமேலம்மாவுக்கு சிலை எழுப்பி, பூஜை, புனஸ்காரங்கள் செய்யப்பட்டன.
ஜெயசாமராஜேந்திர உடையாருக்கு, ஸ்ரீகண்ட தத்த நரசிம்ம ராஜ உடையார் பிறந்தார் என்றாலும், இவருக்கு குழந்தை பிறக்கவில்லை. இவர் இறப்புக்கு பின், 2013ல், யதுவீர் தத்தெடுக்கப்பட்டார். 2016ல், யதுவீருக்கும், ராஜஸ்தான் துங்கார்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த, திரிஷிகா குமாரிக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு, தற்போது குழந்தை பிறந்து உள்ளதால், அலமேலம்மாவின் சாபம் நீங்கியதாக அர்த்தமில்லை.
யதுவீரின் மகனுக்கு குழந்தை பிறந்தால், சாபம் நீங்கியதாக கருதலாம். 1953ல், ஸ்ரீகண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் பிறப்புக்கு பின், யது வம்சத்தில், இதுவரை ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை. 55 ஆண்டுகளுக்கு பின், தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஸ்ரீ ராமர் பிறந்த புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசியில் குழந்தை பிறந்து உள்ளதால், அரச வம்சத்தில், புதிய அத்தியாயம் உருவாவதாக, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
08-டிச-201710:30:16 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> silarin vaakkile eppothume sani thaan iruppaano
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-டிச-201707:39:50 IST Report Abuse
Rajendra Bupathi ஜாதகப்படி முதலில் ஆயுசு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்? தீர்ர்க்க ஆயுசாக இருந்தால் மட்டுமே சாபம் நீங்கியதாக அர்த்தம்? ஆனால் அலமேலு அம்மாள் சாபம் கொடுக்கும் பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், அரசின் ஆட்கள் பெண் என்று பாராமல் பழைய மஹாராணியிடம் அநாகரிகமாக நடத்தியதாகவும் வரலாறு இருக்கிறது?அதன் காரணமாகவே தன்னை கை விட்ட தலைகாட்டு காவிரி கறையில் இருந்த அத்தனை தெய்வங்களின் கோவில்களூம் மண் மேடாகும் படியும்? உடையார் வம்சம் வம்வமற்று போகும்படியும் சாபம் இட்ட பிறகேதான் அவர் தலைக்காட்டில் இன்றளவும் மண்மேட்டால் மூடிய கோவில்களின் அருகில் ஓடும் காவிரியில் குதித்து தறேகொலை செய்து கொண்டார்? என்பதுசரித்திரம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை