ஒரே பாலின திருமணம் : ஆஸ்திரேலியா அனுமதி| Dinamalar

ஒரே பாலின திருமணம் : ஆஸ்திரேலியா அனுமதி

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிட்னி: ஒரே பாலினத்தைச் சேர்ந்தோர், திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி அளிக்கும் மசோதா, ஆஸ்திரேலிய பார்லிமென்டில் நிறைவேறியது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தோர், திருமணம் செய்து கொள்வதற்கு, 20 நாடுகள் அனுமதி அளித்துள்ளன. ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வதற்கு, அனுமதி அளிக்கக் கோரி, ஆஸ்திரேலியாவில், நீண்ட காலமாக போராட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில், இது தொடர்பான மசோதா, பார்லிமென்டில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா குறித்து, மக்களிடம் கருத்து கேட்டு, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
ஓட்டுப் போடுவதற்கு தகுதி உள்ளவர்களில், 80 சதவீதம் பேர், இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்றனர். 1.27 கோடி மக்கள் தொகையில், 62 சதவீதம் பேர், ஓரின திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த மசோதா பார்லிமென்டின் மேல்சபையில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதா, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 150 எம்.பி.,க்களில், நான்கு பேரை தவிர, மற்ற அனைவரும் ஆதரவாக ஓட்டளித்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும், பார்லிமென்டுக்கு வெளியே காத்திருந்த மக்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை