காங்.,கிலிருந்து மணிசங்கர், 'சஸ்பெண்ட்'| Dinamalar

காங்.,கிலிருந்து மணிசங்கர், 'சஸ்பெண்ட்'

Added : டிச 08, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை, கடுமையாக விமர்சித்த, காங்., மூத்த தலைவர், மணி சங்கர் அய்யர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக,'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர், மணிசங்கர் அய்யர் நேற்று சில கருத்தை கூறியிருந்தார். ஹிந்தியில், 'நீச்' எனப்படும் வார்த்தையை அவர் பயன்படுத்தினார். இதற்கு, மிகவும் கீழ் ஜாதியை சேர்ந்தவர் என்ற பொருளும் உண்டு.
இதைக் கண்டித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நேற்று, 'டுவிட்டர்' சமூகவலை கூறியுள்ளதாவது: காங்கிரஸ் குறித்து, பா.ஜ., மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, கீழ்த் தரமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வித்தியாசமான கலாசாரம், பாரம்பரியம் உள்ளது. இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக் கூடாது. பிரதமர் குறித்து கூறியதற்கு, மணி சங்கர் அய்யர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, நானும், காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறோம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

இது குறித்து மணி சங்கர் அய்யர் கூறியதாவது: அம்பேத்கர் சர்வதேச மையம் திறப்பு விழாவில், காங்கிரஸ் குறித்தும், ராகுல் குறித்தும் பிரதமர் மோடி மோசமாக விமர்சனம் செய்தார். எனக்கு ஹிந்தி தாய் மொழியல்ல. அதனால் நான் ஹிந்தியில் பேசினாலும், ஆங்கிலத்தை மனதில் வைத்தே பேசுவேன். நான், 'நீச்' என்ற வார்த்தையை, கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. மிகவும் வெறுக்கத்தக்க வகையில் பேசுகிறார் என்ற எண்ணத்திலேயே அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். நான் கூறிய வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிடம், மணி சங்கர் அய்யரை, அதிரடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து, நேற்றிரவு சஸ்பெண்ட் செய்ததுடன், மோடியை விமர்சித்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி, அவருக்கு, நோட்டீசும் அனுப்பியுள்ளது.
மணிசங்கர் அய்யரின் விமர்சனம், குஜராத் தேர்தலில், காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காகவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காங்., மேலிடம், அவரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-டிச-201716:10:42 IST Report Abuse
Loganathan Kuttuva அரை குறையாக தெரிந்த ஹிந்தியில் பேசினால் இந்த நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-டிச-201713:46:19 IST Report Abuse
Pasupathi Subbian கேடு கெட்ட அரசியல்வாதி. சும்மா உள் கோட்டை அணிந்து கொண்டு , டெல்லியில் உட்கார்ந்துகொண்டு , ஜால்ராஅரசியல் செய்கிறார். மயிலாடுதுறையில் இருந்து விரட்டிவிடப்பட்ட ஜென்மம் இது.
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
08-டிச-201710:20:56 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam சுய மரியாதை உள்ள அரசியல் வாதி மணி சங்கர் ஐயர்... முன்பு ராஜிவ் கொலை குற்றவாளிகலான முருகன்,சாந்தன்,அறிவை தூக்கில் போடாதீர்கள் . சிறையில் வாழ்ந்து விட்டு போகட்டும் என்றார் அப்படி பேசிய ஒரே காங்கிரஸ் காரர் அவர்தான். அதற்கு அல்லக்கையான இளங்கோவன் நீ அனுபவித்த மந்திரி பதவி சோனியா அன்னை போட்ட பிட்சை என்றார் . மனசாட்சி உள்ள நல்ல மனிதர்
Rate this:
Share this comment
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
08-டிச-201714:10:47 IST Report Abuse
Nemam Natarajan PasupathyHe is the most arrogant Congress leader after VKK Menon. If he did not know Hindi, how his other words in that sentence are without mistake. He is a no body in the Congress party and some how wants to resurface by attacking Modi in support of Rahul. Unfortunately, his arrogance before the Lok sabha elections cost the Congress party very dearly. He said Modi can serve tea to delegates of AICC Session. Now he has used the word "neech" which no one uses. Gandhi called them Harijans ( Children of Vishnu) . This man went to Pakistan and told the terror organisations to eliminate Modi. What kind of a man is he. You call him "சுய மரியாதை உள்ள அரசியல் வாதி மணி சங்கர் ஐயர்.." He was kicked out by Rahul Gandhi from his Ministerial post when he did not a petroleum academy in Amethi. Still he is bootlicking Rahul. What self respect you are talking about....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X