பழநியில் போலி கைடுகள் அதிகரிப்பு: பணத்தை இழக்கும் பக்தர்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநியில் போலி கைடுகள் அதிகரிப்பு: பணத்தை இழக்கும் பக்தர்கள்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பழநி: சபரிமலை சீசனை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு வரும் கேரளா, ஆந்திரா, கர்நாடக பக்தர்கள் போலி கைடுகளிடம் பணத்தை இழந்து தவிக்கின்றனர்.தமிழகத்தின் முதன்மைஆன்மிக தலமாக உள்ள, பழநி மலைக் கோயிலுக்கு விழா நாட்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் வெளி மாவட்ட, மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமாக வருகின்றனர்.
தற்போது கார்த்திகை மாதம், சபரிமலை சீசனை முன்னிட்டு கர்நாடக, ஆந்திரா, கேரளா பகுதிகளில் இருந்து பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. அவ்வாறு வருவோரை, பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் பகுதிகளிலேயே 'கைடு'கள் என்ற பெயரில் சிலர் மடக்கி
விடுகின்றனர். காவி உடை அணிந்த இந்த போலி கைடுகள் சிறப்பு அறைகள், 'ஸ்பெஷல்' தரிசனம், பூஜை, வழிபாடுக்கு உதவுவதாகக் கூறி ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர்.

பணமிழக்கும் பக்தர்கள் : பாத விநாயகர் கோயிலில் துவங்கும் இவர்களின் லீலை மலைக்கோயில் வரை தொடர்கிறது. இவர்களிடம் சிக்கிய பக்தர்கள் பணத்தை இழந்து சிரமப்
படுகின்றனர். இவ்விஷயத்தில் பக்தர்கள் எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே போலீஸ் மற்றும் கோயில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறுவதால் வெளியூர் பக்தர்கள் புகாருக்குப்பின் மீண்டும் அழைத்தால் வரவேண்டும் என்ற அச்சத்தால் போலீசிடம் செல்வதில்லை.
ஆகையால் பக்தர்களை ஏமாற்றும் கும்பலுக்கு அது வசதியாகிவிடுகிறது.
இதுபோன்ற கும்பல் மீது மாவட்ட எஸ்.பி., சக்திவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் பலமுறை எச்சரிக்கிறோம். அறிவிப்பு பலகைகளும் உள்ளது.
இருப்பினும் வெளியூர் பக்தர்கள் போலிகளிடம் சிக்கிக்கொள்கின்றனர். புகார் அளித்தால்
போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை