ஜி.எஸ்.டி.,யை கூறி கட்டண கொள்ளை : கூரியர் நிறுவனங்கள் மீது குவியும் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.,யை கூறி கட்டண கொள்ளை : கூரியர் நிறுவனங்கள் மீது குவியும் புகார்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: ஜி.எஸ்.டி.,யை (சரக்கு மற்றும் சேவை வரி) காரணமாக கூறி கூரியர் நிறுவனங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தபால்துறை, போலீசாருக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தபால்துறை சார்பில் 50 காசுக்கு தபால் கார்டு விற்பனை செய்யப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெறும் 50 காசு செலவில், உரியவரின் முகவரியில் தகவல் சேர்க்கப்படுகிறது. ஆனால் கூரியர் நிறுவனங்களிலோ கட்டணக்கொள்ளை நடப்பதாக வாடிக்கையாளர்கள் புலம்புகின்றனர். ஜி.எஸ்.டி.,க்கு முன் சில கூரியர் நிறுவனங்கள் சாதாரண தபால் ஒன்றுக்கு 25 ரூபாய் வசூலித்தன. ஜி.எஸ்.டி.,க்கு பின் சாதாரண தபால் ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கின்றனர். 25 ரூபாய்க்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., சேர்த்தாலும் 4.50 ரூபாய் என 29.50 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் தபால் ஒன்றுக்கு 20.50 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றனர். துணி பார்சல் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் என கட்டணத்தை அதிகரித்து விட்டனர். ஜி.
எஸ்.டி., வசூலித்ததற்கான ரசீதும் வழங்குவதில்லை. சாதாரண ரசீது மட்டுமே தருகின்றனர்.
கூரியர் நிறுவனங்கள் தபால்துறையின் கீழ் இயங்குவதாக கருதும் சிலர், கட்டண கொள்ளை குறித்து தபால்துறை அதிகாரிகள், போலீசாருக்கு புகார்களை அளித்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. கூரியர் நிறுவனங்கள் பார்சல்கள் மட்டுமே அனுப்ப வேண்டும். தபால் அனுப்ப சட்டத்தில் இடமில்லை. எனினும் 'துாது அஞ்சல்' எனும் பெயரில் தபால் அனுப்பி நுாதன கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன. கூரியர் நிறுவனங்களை கட்டுப்படுத்த 'பூனைக்கு மணி கட்டுவது யார்' என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை