வைகை மாசுக்கு ரூ.47 லட்சம் அபராதம் : உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வைகை மாசுக்கு ரூ.47 லட்சம் அபராதம் : உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: கழிவுநீர், குப்பைகளால் வைகையை மாசடையச் செய்தவர்களுக்கு 47 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி தரப்பில், உயர்நீதிமன்ற
மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:வைகை ஆறு தேனி வருஷநாட்டில் துவங்கி பயணித்து, ராமநாதபுரம் பெரிய கண்மாயில் முடிகிறது. மதுரை வைகையில் கழிவுநீர் கலக்கிறது.
ஆக்கிரமிப்புகள் உள்ளன. மதுரை உட்பட 5 மாவட்டங்களில் கழிவுநீர், குப்பையால் வைகை மாசுபடுவதை தடுக்க வேண்டும். கண்காணிப்புக்குழு அமைக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ரமேஷ் மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவு:மதுரையில் வைகை ஆற்றை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான மறு சீரமைப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை, வியாபார நிறுவனங்களின் கழிவுகளை குவிப்போருக்கு மாநகராட்சி கமிஷனர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தொடர்ந்து மீறுவோர் மீது முதற்கட்டமாக அபராதம் விதிக்க வேண்டும். அடுத்தகட்டமாக உரிமத்தை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.தாரணி அமர்வு நேற்று
விசாரித்தது. மதுரை மாநகராட்சி சார்பில், '6969 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 47 லட்சத்து 20 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் 32 லட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது,' என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நிலை குறித்து மதுரை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.,3 க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை