திட்டமிட்ட கொள்ளை: மோடியை தாக்கிய மன்மோகன் சிங்| Dinamalar

திட்டமிட்ட கொள்ளை: மோடியை தாக்கிய மன்மோகன் சிங்

Added : டிச 08, 2017 | கருத்துகள் (76)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடி,Modi,மன்மோகன் சிங்,Manmohan Singh, கொள்ளை,robbery,  செல்லாத ரூபாய் நோட்டு,demonetization, மத்திய அரசு, central government,  வேலை வாய்ப்புகள் , Job opportunities,

ராஜ்கோட்: ரூபாய் நோட்டு அறிவிப்பு, ஒரு திட்டமிட்ட கொள்ளை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காங்., கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, ஒரு திட்டமிட்ட கொள்ளை; மக்கள் மீது திணிக்கப்பட்ட பேரிடர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, வங்கி முன் வரிசையில் நின்று, ஏராளமானோர் உயிர் நீத்தனர். மத்திய அரசு, இனியும் இது போன்ற தவறு செய்யக் கூடாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்,

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
08-டிச-201717:14:19 IST Report Abuse
K.Sugavanam எல்லா பக்தாள்ஸுக்கும் கோவில்பட்டி கடலை முட்டாய் ஒரு பாக்கெட்டு பார்சேல்.. இது லோனாவாலா சிக்கிடை விட டேஸ்ட்டு சூப்பரா இருக்கும் ஜீக்களே..
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
08-டிச-201716:09:46 IST Report Abuse
Vijay D Ratnam குடோன்களிலும், கன்டெய்னர்களிலும், பண்ணை வீடுகளிலும், பினாமிகளிடமும் பதுங்கி இருந்த பல லடசம் கோடி ரூபாய் பணம் வங்கிக்கு வந்தது கொள்ளையா. பணமதிப்பிழப்பால் ஏழைகளோ, நடுத்தர வர்க்கத்தினரோ, நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணக்காரர்களோ பதிப்படையவில்லை. ஒரு மாதம் கொஞ்சம் அசெளகர்யம்தான். நாட்டுக்காக அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதே சமயம் ஊழல் அரசியல்வாதிகள், லஞ்ச அதிகாரிகள், ஹவாலாக்கள், போதை பொருள் மாஃபியாக்கள், சட்டவிரோதமாக பணத்தை கொள்ளையடித்து குவித்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள். பத்து ஆண்டுகள் இவர்களுக்காக அரசியல் செய்த சிங் இப்படித்தான் புலம்புவார். நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், வைமேக்ஸ் ஊழல், காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என்று கொள்ளையடித்து குவித்த பல லட்சம் கோடிகளை பினாமிகளின்கணக்கில் போட்டு அவர்களுக்கு கமிஷன் கொடுத்து மாற்றுவது கொஞ்சம் கஷ்டம்தான். இனி அப்படி கொள்ளையடிக்கப்பட்ட கோடிகள் எப்படி வங்கிக்கு வந்திருக்கிறது எப்படியெல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது என்று வருமானவரித்துறை தீர விசாரித்து ரெவிட் அடிக்கவேண்டியதுதான் பாக்கி. பட் சிங்கின் நேர்மை பாராட்டவேண்டும். அவர் எந்த இடத்திலும் பத்து ஆண்டுகாலம் நான் நேர்மையாக லஞ்சம், ஊழல், கமிஷன் அதிகாரத்துஷ்பிரயோகம் இல்லாத ஒரு ஆட்சியை கொடுத்தேன் என்று சொன்னதே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
08-டிச-201714:34:59 IST Report Abuse
Snake Babu //அதிகாரவர்க்கமும் நீதிபதிகளும் காங்கிரஸ் காலத்து நியமனங்கள் அவர்களை நீக்க வழியுண்டா? அவர்கள் மூலம் காங் திருட்டுகளை தண்டிப்பட்டது சாதாரண வேலையில்லை... // அப்ப உங்களால முடியாதுனு ஒத்துக்கீறிங்களா தேச நேசன் - Chennai,இந்தியா அவர்களே. தண்டிக்க முடியாது. இவ்வளவு அசுர பலம் இருந்தும். சரி ஒன்றுக்கு பதில் சொல்லிவிட்டேர்கள். அடுத்து பணம்தப்பிழைப்பின் பலன்களை கொஞ்சம் பட்டியலிட்டு கூறுங்களேன். அய்யா தேவையான விவாதம் இது போன்றவையே, அது ஆரோக்கியமான விவாதம். அய்யா யாரவது 500 1000 செல்லாததாக்கியது GST, மானியங்கள் நீங்கியது இதில் அடைந்த நன்மைகள் இவற்றை எல்லாம் விவாதியுங்கள். இதை தான் நாங்கள் விரும்புகிறோம். தற்போது அணைத்து கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நடக்கும் ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியது என்ன என்று ஆராயாமல் சுட்டிக்காட்டியவரை எதிர்கட்சினராக சித்தரிப்பது தவறு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X