போலீசார் மீது தாக்குதல் : ராணுவ வீரர்கள் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசார் மீது தாக்குதல் : ராணுவ வீரர்கள் சரண்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி. இவர் சாத்தங்குடி பகுதியில் சில நாட்களுக்கு முன் காரில் இரவுரோந்து சென்றார். விடுமுறைக்கு வந்திருந்த சாத்தங்குடி ராணுவ வீரர்கள் கார்மேகம்,35, கருப்பசாமி,34, மது அருந்திக் கொண்டிருந்தனர். அன்னக்கிளி எச்சரித்தபோது, இருதரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கார்மேகம், கருப்பசாமி இரும்பு கம்பியால் அன்னக்கிளியை தாக்கினர்.
தடுக்க வந்த அவரது கார் டிரைவர் பாலமுருகனை தாக்கியதில், கண் பார்வை பறிபோனது. திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.தலைமறைவான கார்மேகம், கருப்பசாமி மதுரை நீதித்துறை நடுவர் (5) நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
அவர்களை டிச.,11 வரை காவலில் வைக்க நடுவர் சபீனா உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை