மழையின்றி குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையின்றி குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மழையின்றி குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்

கூடலுார்: நீர்பிடிப்பில் மழையில்லாததால் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறையத் துவங்கியுள்ளது.
பெரியாறு அணை நீர்பிடிப்பில் கடந்த வாரம் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து 130 அடியைக் கடந்தது. மேலும் ஓரிரு நாட்கள் கன மழை தொடர்ந்திருந்தால் நீர்மட்டம் 136 அடியைக் கடந்திருக்கும். ஆனால் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 858 கன அடியாக இருந்தது. தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1600 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்வரத்தைக் காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதாலும், நீர்பிடிப்பு பகுதியில் மழையில்லாததாலும், அணையின் நீர்மட்டம் குறைந்து 129.70 அடியாக (மொத்த உயரம் 152 அடி)இருந்தது. நீர் இருப்பு 4,633 மில்லியன் கன அடியாகும். நீர்வரத்து குறைந்துள்ளதால் தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவையும் சற்று குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 57.28 அடியாக ( மொத்த உயரம் 71 அடி) உள்ளது. நீர்வரத்து 1,745 கன அடியாகவும், நீர்திறப்பு 4,860 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 3,103 மில்லியன் கன அடியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X