திருப்புவனம் வந்தது வைகை தண்ணீர் : நுரையுடன் பாய்ந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புவனம் வந்தது வைகை தண்ணீர் : நுரையுடன் பாய்ந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி

Added : டிச 08, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருப்புவனம் வந்தது வைகை தண்ணீர் : நுரையுடன் பாய்ந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி

திருப்புவனம்: வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு திருப்புவனத்தை நேற்று வந்தடைந்த தண்ணீர் நுரையுடன் பாய்ந்ததால், விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வைகை ஆற்றில் கடந்த சில வருடங்களாக தண்ணீர் திறக்கப்படாததால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கடந்த 5 வருடங்களாக சிவகங்கை மாவட்டத்தில் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வைகை அணையிலும் முல்லை பெரியாறு அணையிலும் தண்ணீர் இருப்பதால் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தினர். இதனையடுத்து கடந்த 5ம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக 3 ஆயிரத்து 500கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் 10ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என்றும் அதன்பின் நீர்வரத்தை பொறுத்து 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை திறக்கப்படும் என தமிழக அரசுஅறிவித்தது.

பொங்கிய நுரை : கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததாலும் தொடர் மணல் திருட்டு காரணமாக மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டதாலும் 5ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று தான் திருப்புவனம் வந்தடைந்தது. வழிநெடுகிலும் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் திறந்து விடப்பபட்ட கழிவு நீர், தொழிற்சாலை கழிவு நீர் ஆகியவற்றால் வைகை தண்ணீர் மாசடைந்து வந்தது.ஆள் உயரத்துக்கு நுரையுடன் திருப்புவனம் வந்த தண்ணீரைப் பார்த்து பொதுமக்களும், விவசாயிகளும் அதிர்ச்சியடைந்தனர். குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர் என்பதால் பாசன கால்வாய் ஷட்டர்கள் அனைத்தையும் பொதுப்பணித்துறையினர் பூட்டினர். அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தட்டான்குளம் தடுப்பணை, மாரநாடு தடுப்பணை உள்ளிட்ட இடங்களில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் வரை தண்ணீரை கொண்டு செல்ல பொதுப்பணித்துறை சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் மலையரசன், செயற்பொறியாளர் வெங்கட்ராமன், பரமக்குடி செயற்ெபாறியாளர் வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் திருப்புவனம் பகுதியில் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.தண்ணீரின் அளவு, வரும் வேகம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு உயரதிகாரிகளுக்கு தொடந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 10:௦௦ மணிக்கு மாரநாடு தடுப்பணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்களும், நாணல்களும் அடர்ந்து இருந்ததால் தண்ணீர் வர தாமதமானது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chola - bangalore,இந்தியா
08-டிச-201714:21:27 IST Report Abuse
Chola மக்கள் எல்லாம் மாக்கள் ஆகின்றோம். நம் சோத்தில் நாமே மண்போடுவது தான் நம் ஆற்றை நாமே மாசு படுத்துவது..
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
08-டிச-201711:10:24 IST Report Abuse
Harinathan Krishnanandam நுங்கும் னுறையுமாய் ஆர்ப்பரித்து வந்த நதி என்று படித்தது புகைப்படத்திலும் விடியோவில் பார்த்தது நினைவிற்கு வந்தது
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-டிச-201708:05:16 IST Report Abuse
Rajendra Bupathi சரி ? சரி? அதுல சாயபட்டறை கழிவு கலக்குதான்னு பாருங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X