ஊருக்கு ஊர் மாறுபடும் பஸ் கட்டணம் : : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஊருக்கு ஊர் மாறுபடும் பஸ் கட்டணம் : : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : டிச 08, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பாரபட்சமின்றி அனைத்து ஊர்களிலும் அரசு, தனியார் பஸ்களில்ஒரே சீராக வசூலிக்க நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் நாகல்நகர் நல்லையம்பெருமாள்

தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அரசு, தனியார் பஸ்களில் 2011 நவ.,17 ல் வெளியான அரசாணைப்படி கட்டணம்மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல்-மதுரைக்கு பஸ் கட்டணம் ரூ.18.50 லிருந்து 28 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போது 33 ரூபாய் கட்டணம்வசூலிக்கின்றனர். 2011 அரசாணைப்படிதிண்டுக்கல்- தேனிக்கு ரூ.22.50 லிருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது 45 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இது அரசாணைக்கு எதிரானது. 2011 ல் அரசாணைப்படி டவுன் பஸ்களில் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக
கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.3மற்றும் ரூ.4 டிக்கெட்டுகள் வழங்கப்படுவதில்லை. சென்னை, திருச்சி, கோவையில் தற்போதுவரை டவுன்பஸ்களில் 3 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனியில் ரூ.3 மற்றும் 4 ரூபாய்கட்டணம் வசூலிப்பதில்லை. அரசாணைக்கு முரணாக பாரபட்சம் காட்டப்படுகிறது.2011 அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பாரபட்சமின்றி அனைத்து ஊர்களிலும் அரசு, தனியார்பஸ்களில் ஒரே சீராக வசூலிக்க நடவடிக்கை கோரி போக்குவரத்து கமிஷனருக்கு மனு அனுப்பினேன்.
மனுவைபரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு நல்லையம்பெருமாள் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.தாரணி அமர்வு போக்குவரத்து கமிஷனர், அரசு போக்குவரத்துக் கழகசெயலாளர், மதுரை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன., 4க்குஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X